Sunday, May 22, 2011

இலட்சக் கணக்கானோரின் பொதுப் பிரச்சினையான முதுகு வலிக்கு ஜெல்! பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை


முள்ளந்தண்டில் ஏற்படும் பாதிப்புக்களால் தோன்றும் முதுகு வலிகளுக்கு எவ்வளவுதான் மருந்து குடித்தாலும், அது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிவாரணத்தை அளிக்காது. இலட்சக்கணக்கானவர்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. இவர்களுக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிதாக ஒரு ஜெல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஆயிரக்கணக்கான நுண் சேர்க்கைகளைக் கொண்டது. உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டதும், இந்த நுண் துணிக்கைகள் உடலுக்குள் ஒன்றுசேர்ந்து முள்ளந்தண்டுத் தட்டுக்களில் ஏற்பட்டுள்ள பாதுப்புக்களை சரி செய்யக்கூடியது. பிரிட்டிஷ் மக்களுள் 80 சதவீதமானவர்கள் தங்களது ஆயுள் காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் முதுகு வலியால் அவஸ்த்தைப் படுகின்றனர்.
பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை இது தாக்குகின்றது. முள்ளந்தண்டில் மிகவும் மோகமாகப் பாதிக்கப்பட்ட பகுதி மட்டுமே சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகின்றது . இவ்வாறான சத்திர சிகிச்சையின் பின் நோயாளி குணமடையவும் நீண்ட காலம் செல்லும். ஆனால் இந்தப் புதிய ஜெல் ஊசி மூலம் ஏற்றப்படுவதன் மூலம் நோயாளி ஓரிரு தினங்களில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்து விடுகின்றார். மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் பின் இந்த ஜெல் வெற்றியளித்துள்ளது. கோடிக் கணக்கான துணிக்கைகள் திரவ வடிவில் உடலுக்குள் செலுத்தப் பட்டதும் அவை உடலுக்குள் ஒன்று சேர்ந்து ஜெல்லாக மாறி உரிய பலனை அளிக்கின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

நன்றி:Tamillcnn.com


No comments: