Tuesday, July 19, 2011

மனிதர்களைப் போல் பேசும் நாய் !

இந்த நாயின் பெயர் மிஸ்கா. மனிதர்களின் மொழியை பேசக் கூடிய ஆற்றலைப் பெற்று இருக்கின்றது. 12 சொற்களைப் பேசக் கற்றுக் கொண்டு உள்ளது. I love you, Hello, Welcome home போன்ற வார்த்தைகளைச் சொல்லப் பழகி உள்ளது.

thank you:.tamilcnn.com

Wednesday, July 13, 2011

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது. 2006 ம் ஆண்டு இதன் கட்டடப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார். ஹைடிரோபாலிஸ்ன் மேற்ப்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.

thanks:tamilenn.com

Monday, July 11, 2011

முத்தத்தின் நிறம்! உதடால் வரையப்பட்ட ஓவியம்

Jackson Pollock எனும் இந்தப்பெண் தன் உதடை மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கிறார்.

உதட்டில் சாயத்தைப்பூசி பின் பெரிய கன்வாஸ் தாளில் முத்தமிட்டு தான் விரும்பும் ஓவியங்களை படைக்கிறார்.

இணையத்தளத்தில் தரவேற்றப்பட்ட இவரின் வீடியோ பெரும் வரவேட்பைப் பெற்றுள்ளது.

இதன் போது இவரின் கண்கள் அதிக நேரம் தாளிட்கு அருகில் இருந்ததால் மிகவும் களைப்படைந்தனவாம்.

அந்த வலியையும் பொருட்படுத்தாமல் சாதனை படைத்த இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.










Thanks:- tamilenn.com

Sunday, July 10, 2011

கூலாக வேலை செய்வதற்கு உலகத்தில் மிகச்சிறந்த இடம்

Willy Wonka factory இது தன் அந்த சொர்கபுரி. இங்கே வேலை செய்பவர்கள் மிகவும் கூலாக இருப்பார்களாம்.

காரணம் இவர்களின் வேலைத்தளத்தின் அமைப்பு அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. எபோழுதும் போல ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதால் மனதிற்கும் உடலிற்கும் சோர்வுதான் ஏற்படும்.

பல மில்லியன் பெறுமதியான Project செய்யும் போது இவ்வாறான சூழலையே இவர்கள் விரும்புகின்றனர்.

Google, Microsoft மற்றும் Skype என்பன தமது ஊழியர்களுக்கு இதுபோன்ற வசதிகளைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












thanks:tamilenn.com

Saturday, July 9, 2011

பாட்டி வடைசுட்டகதையை திரைப்படமாக எடுத்தால் பாகம் 2

இந்தபதிவின் முதல்மாகத்தில் பீட்டர் ஜாக்சன் அவர்களின் ஸ்டைலில் கதையை சொல்லியிருந்தேன் படிக்காதவர்கள் படித்து பார்க்கவும்.http://rajeepan.blogspot.com/2011/07/blog-post_988.html

சாதரணமாக இவரதுபடங்கள் பல பாகங்களாக வந்து சாதனை படைத்துள்ளன இவரது படங்கள் தொழில்நுட்பரீதியாக பல சாதனைகளைப்படைத்துள்ளன..இவரது உலகத்தரமாக கற்பனைகளைக்கேட்டு ஓவர்டா சாமி என்று முனுமுனுத்துக்கொண்டுடிருக்கும் உங்களுக்கு அடுத்ததா ஒரு உள்ளூர் இயக்குனர்..ஊரேல்லாம் அவருக்கு பெயரு..
உலக இயக்குனர்...

பேரரசு

இவருக்கு கதைகூட முக்கியமில்லை காதாநாயகன் முக்கியம் அதை விட படத்தோட தலைப்பு ஊர் பேரில இருக்கனும்.யாரா ஹீரோவா போடலாம் வேறயாரு எங்க இளையதளபதிதான்..படத்தோட தலைப்பு வேலூர்..
அடுத்த முக்கியமான விசயம்..பன்ஜ்ச் டயலாக்..

"பாட்டி சுட்டா வடை..வெட்டமாவிட்டா சடை..என் பின்னாடி பாரு மக்கள் படை..."
அதுவும் ஒக்கே..பாட்டு..அட அதையும் இவரே போரடிக்கிற நேரத்தில டம்மலக்கே டிம்மாங்கோ போன்ற அரிய இலக்கிய வரிகளைப்போட்டு எழுதுமுடிச்சுடுவார்..குத்தாட்டம் ரெடி..நாலு பைட் ரெடி..இப்ப கருமம் கதைமட்டும் தான் தேவை..இந்தக்கதையை எங்க இளைய தளபதிக்கு ஏத்தமாதிரி எப்படி மாத்தலாம்..
ஆரம்பகாட்ச்சி..ஓரில இருக்கிற கஸ்டபட்டவங்க ஏழைங்க எல்லாரும் கூட்டமா ஓடி வராங்க..அவங்க போய் நிக்கிற இடம் ஒரு இத்துப்போன மெக்கானிக்கடை அதில நட்டுக்கழட்டிற மெக்கானிக் தான் எங்க ஹீரோ..தம்பி நீங்கதான் எங்களை காப்பத்தனும் ஊர் எல்லாம் தீவிரவாதிங்க தொல்லை தாங்க முடியல..பக்கத்து நாட்டிலிருந்து வந்து தாக்குதல் நடத்தீட்டு ஓடிபோயிடுறங்க..அரசாங்கம் கூட எங்களை கண்டுகிறது இல்லை நீங்க தான் இந்த அராஜகத்தை தட்டிகேட்கனும்..என்று சொல்லுறங்க.அதைக்கூட பெறுத்துக்கொண்டு அமைதியாக போயிடுறாரு அமைதிவிரும்பியான நம்பஹீரோ..இதுக்கு காரணம் அவரையே நம்பியிருக்கும் அவரேட ஒரே தங்கட்சி தான்..அப்படியே கொஞ்சநேரம் தங்கட்ச்சி சேன்டிமேன் காட்ச்சியால மக்கள களங்கவைச்சிடுறாரு..அப்படி பட்ட தங்கட்ச்சி பாசமலர் அண்ணனுக்காக ஆசை ஆசையா ஓரு வடையை சுடுகின்றார்...இதை அறிந்துகொண்ட தீவிரவாதிகள் இந்தபாசவடையை அண்ணன் சாப்பிடுவதைத்தடுப்பதற்க்காக தங்கச்சியை போட்டுதள்ளிட்டு வடையைக்கடத்திக்கெண்டு பாகிஸ்தான் தப்பித்துச்சென்றுவிடுகின்றார்கள்.இதனால் வெகுண்டெழுந்த நம்ம ஹீரோ இனிமேல் சரவெடி என்ன இடைவெளையில் பாகிஸ்தானுக்கு கிளம்புகின்றார்..

intermission
பாகிஸ்தான் போன எங்க விஜய் தனது பழைய நண்பன் வடிவேலு வீட்டில தங்கியிருந்து தீவிரவாதிகளை தீவிரமா தேடத்தெடங்குகிறார்..இடையில பாகிஸ்தானிலயே பெரிய பணக்காரர் மகள் அசின் இவரை பார்த்ததும் காதல்கொண்டு இவருக்கு பின்னால நாயாபேயா அலைந்துகொண்டிருக்கிறாள்.இவரும் போனாப்போகுது என்று அவருக்கு வாழ்க்கைகொடுக்கின்றார்.தீவிரதேடுதலின் பின்னர் வடையை கடத்திவைத்திருக்கும் தீவிரவாதிகளின் தலைவன் ஒசாமா பின்லாடன் என்பதை கண்டுபிடிக்கின்றார்..உடனே ஒசாமாவுக்கு முன்னால போய் என்ட வடையை அடையநினைச்ச உன்னை நிம்மதியா இருக்கவிடமாட்டன்டா என்று டயலாக்பேசுகின்றார்..உடனே ஒரு நூறு தீவிரவாதிகள் எங்கையிருந்தோ ஓடிவந்து துப்பாக்கியால விஜய சரமாரியாக சுடுகின்றனர்..சீரிப்பாய்ந்து வந்தகுண்டுகள் இவரை சீண்ட பயப்பட்டு அவரை மூன்றுதரம் வலம்வந்து கடைசியாக அவர் காலடியில் விழுகின்றன.இதனை பார்த்து பயந்துபோன ஒசமா ஒரு ரொக்கட் லான்சர எடுத்து விஜயை நோக்கி சுடுகின்றார்..பாய்ந்து வந்த குண்டைபிடிச்சு முதுகு செறிந்துவிட்டு அதை திருப்பி ஒசாமாவை நோக்கி போடுகின்றார் ஹீரோ..ஒசாமா கதை ஓவர்..கருகின ஒசாமின் கையில் இருந்த வடையை எடுத்து கண்ணீர் மல்க சென்டிமெண்டாகின்றார்..அப்புறம் அந்தவடையையும் எடுத்திட்டு டெலிபோன் பூத்தில போய் ஒபாமாவுக்கு ஒரு போனை போட்டு இப்படித்தான் பழிவாங்காய்ட்ச்சு என பேருமையேல்ல தேவையில்லை நீங்களே வைச்சுக்குங்க என்று சொல்லுறாரு.இதைக்கேட்ட ஒபாமா அமெரிக்காவே உங்களுக்கு கடமைபட்டு இருக்கு என்று உணர்ச்சி வசப்பட.அசினையும் கையிலபிடிச்சிட்டு வெற்றிகரமா நடையக்கட்டிறாரு நம்ம ஹீரோ..அப்புறம் என்ன ஹவுஸ் புல் போட்டுதான் பாலாபிசேகம் தான்...



Friday, July 8, 2011

பாட்டி வடைசுட்டகதையை திரைப்படமாக எடுத்தால்!...

பாட்டி வடைசுட்டகதையை கேள்விப்படதாவர்களே இருக்க முடியாது..இந்த கi:ட சில பிரபலங்கள் திரைப்படமாக எடுக்க முன்வந்தார்கள் என்றால் எப்படியேல்லாம் அந்தக்கதையை தமதுபாணியில் மாற்றியமைத்து எடுப்பார்கள் என ஒரு ஜாலியான கற்ப்பனை..
Peter Jackson












பீட்டர் ஜாக்சன்


நாசாவில ஒரு மறைவான இடத்தில பலவருடங்களாக ரகசியமான ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த ஆய்வு திட்டத்தின் தலைமை விஞ்ஞானி
ஏஞ்சலினா ஜோலி(அதுதாங்க எங்கபாட்டி).உலகத்தையே ஒரு நிமிடத்தில் அளிக்க கூடிய அணுவாயுத்திறக்கான கண்டுபிடிப்பினை உருவாக்கி அதைபாதுகாப்பாக ஒரு வட்டவடிவான பேழையில் மறைத்து வைக்கின்றார்.இதனை எப்படியோ அறிந்த ரஷ்யமாபிய வில்லன்கள் அதைக்கொள்ளையடிப்பதற்க்க காட்டிற்க்குச்சென்று கிங்கொங்கை பிடித்து வந்து அராய்ட்ச்சி கூடத்திற்க்கு அனுப்புகின்றனர்.


இந்தக்காட்ச்சிக்காகவே அமெரிக்க நகரை அச்சுஅசலா உருவாக்கி அதை அணுகுண்டு வைத்து அழித்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அழிக்க வந்த கிங்கொங் எங்கநாயகிய பார்த்து லவ்வோ லவ்வுனு லவ்வி காதல் கவிதையேல்லாம் எழுதிற லெவலுக்கு போயிடுது.கிங்கொங் இவங்க பக்கம் சேர்ந்து கொண்டதைத் தெரிஞ்சுகெண்ட வில்லங்கள் பெரிய பெரிய டைனோசரா பிடிச்சு உலகத்தை அழிக்க அனுப்பிறாங்க..அதாவது அமெரிக்கா என்ற உலகத்தை..அப்புறமேன்ன அமெரிக்க அழியுது
அதைக்காப்பத்த ஒரு நாலஞ்சு காதாநாயகர்கள் இணைந்து சாகசப்பயணம் செய்து..ஒவ்வொருவராக மண்டையபோடுகின்றனர்..கடைசிகாதநாயகன் மட்டும் எப்படியோ தப்பி கிங்கொங்கோடு இணைந்து எல்லாடைனசோர்களையும் போட்டுத்தள்ளி உலகத்தை காப்பாற்றுகின்றார்..இதைத்தத்துருபமா எடுப்பதற்க்காக பல சாப்ட்வேரையேல்லாம் உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றார்கள்..3Dதொழில்நுட்பம் தத்துருபமாக கையாளப்பட்டிருக்கின்றது..(இனி வருவதையெல்லாம் எங்கட தொழில்நுட்பப்பதிர்கள் பக்கத்திலயிருந்து பார்த்ததை மாதிரி பக்காவா எழுதுவாங்க படிச்சுத்தெரிஞ்சுகொள்ளுங்கள்...)



தொடரும்...

சிரிப்பு வருது சிரிப்பு வருது...


பாலு:-நான் எதாவது தப்புசெய்தால் எங்கப்பாவுக்கு மூக்கு மேலே கோபம் வரும்!
முரளி:-இது என்னடா அநியாயமா இருக்கு!..
பாலு:-எதுடா அநியாயம்?
முரளி:-பின்னே நீ தப்புசெஞ்சதுக்கு உன்மேலேதானே கோபம் வரணும் மூக்கு மேலே கோபப்படறாரே!..

முரளி:-கோழியோட ஆயுள் எத்தனை நாள் தெரியுமா?
பாலு:-அட, இது கூடத்தெரியாதா!விருந்தாளிங்க வரும் வரைக்கும்!


மாஜிக் நிபுணர்:-ஹலோ, பெண்ணே, மேடைக்கு ,வா என்னை இதற்க்கு முன் உனக்குத்தெரியுமா?..
சிறுமி:தெரியாது ,அப்பா!..


டாக்டர்: நான் கொடுத்த இரும்புச்சத்து மாத்திரையை ஏன் சாப்பிடவில்லை!
பாலு:அவை டூப்ளிகேட் என்று நினைக்கிறேன்!
டாக்டர்:எப்படிச் சொல்லுகிறாய்?
பாலு:அவற்றைக் காந்தம் வைத்துப்பரிசோதித்தேன்.காந்தம் மாத்திரையைக் கவரவில்லையே!..


சிறுமி: அம்மா நான் பிறக்கிறதுக்கு முன்னாலேயே என்னைப் பார்த்திருக்கியா?
தாய்:இல்லையே!..
சிறுமி:அப்புறம் எப்படிப்பிறந்ததும் நான்தான் உன்பொண்ணுன்னு கண்டு பிடிச்சே!..

பாலு:ஒரு வருஷம் நான் நடக்க முடியாமல் இருந்தேன்!
முரளி:அப்படியா எப்போது?
பாலு:நான் குழந்தையாக இருந்தபோது!.


பாலு:பிறந்தநாள் அன்று நாம ஏன் கேக்கை வெட்டுகிறோம்?
குமார்:எதற்க்கு எல்லோரும் சாப்பிடுவதற்குதான்!
பாலு:இல்லை.நாம் ஏன் கேக்கை வெட்டுகிறோம் என்றால், எல்லோருக்கும் முழு கேக்கைக்கொடுக்க முடியாது என்றுதான்!..


முரளி: என்னடா பாலு டிக் ஷனரியைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறாய்?..
பாலு:நான் எப்போ சிரித்தாலும் அர்தத்தோடுதான் சிரிப்பேன்!..

Thursday, July 7, 2011

அதிசயம்….! ஆனால் உண்மை, பேசும் அற்புத வளர்ப்பு மீன்

உலகில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஐரோப்பியாவில் பிரான்சில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்த அதிசயம் இடம் பெற்றுள்ளது . இந்த வளர்ப்பு மீன் பற்றி இதன் பராமரிப்பாளர் பல திகைப்பூட்டும் விடயங்களை கூறுகிறார்.

இதன் பெயர் “சுச்சு“. இந்த மீன் அதிகமான நேரத்தில் வெளியில் தானிருக்குமாம். தண்ணீர் தொட்டியில் இருக்கும் நேரத்தை விட வெளியில் இருப்பதை அதிகம் விரும்புகின்றது.

ஐஸ்கிரீம், லட்டு இவைகளே இதன் பிரதான உணவு என்பதாகவும், பாடல்களுக்கு நடனமடக் கூடியதாகவும், சொல்வதைக் கேட்டு செயல்படக் கூடியதாகவும் காணப்படுகிறது.

இதன் பராமரிப்பாளர்கள் வெளியில் செல்லும் போது கூடவே செல்லப் பிராணி போல் கையில் எடுத்து செல்லுகிறார்கள்



thank:-tamilcnn.com

Ware House காதலன்..


உங்களில சிலபேருக்கு Ware Houseல் வேலைசெய்யும் அனுபவம் கிடைத்திருக்கலாம்..அது ஒரு விசித்திரமான உலகம்..மரத்திலான பலட்டுகளுடனும் பெரியசைஸ் கன்டைனர்கள் ன்விசிபிள் உடைகள் பாதுகாப்புக்காக போடும் கனத்தகாலனிகள் பார்ப்பதற்க்கு சற்று முரட்டுமனிதர்கள்போலவிருக்கும் இளகியமனம் மடைத்த நண்பர்கள்..இந்த உலகினுள் திடிரேன்று வேற்றுகிரகவாசிபோல நுழைந்த எனக்கு ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது..பின்னர் சிறிதுசிறிதாக அந்தநீரோட்டத்தில் மேதுவாக நானும் இணைந்துகொண்டேன்..ஒரு நாள் வேலைசெய்துகொண்டுடிருக்கும் போது இந்தமாதிரி ஒரு சூள்நிலையில் பலவருடம் வெளியுலகமே தெரியாமல் வேலை வீடு என்றே வாழந்த ஒருவனுக்கு திடிரென்று காதல்வந்தால் என்னசெய்வான்.?தனது காதலியை வர்ணித்து எப்படி கவிதையெழுதுவான் என வேடிக்கையாக கற்பனை பண்ணிப்பார்த்தேன்..(இது இப்ப உனக்கு ரொம்ப முக்கியமா என நீங்கள் கெட்கிறது தெரியுது..இப்படித்தான் வாழக்கையில எல்லாத்தையும் வித்தியாசமா யோசிக்கனும்..என்ன பார்த்து எல்லாரும் பழகிக்கொள்ளுங்கள்..)


வீடு விட்டால் வேலை..
வேலைவிட்டால் வீடு..
நடுவிலிருக்கும் றோடு
அறியும் எந்தன் சீரு..

உன்னைக்காணும் வரையில்
என் உலகமொரு சிறையில்..
காய்ந்தமரப்பலட்டாய் வாழ்ந்திருந்தேன்
அன்று..காதல் கொண்டபின்பு கனவில்
கூட சிலிர்ப்பு..

கன்டைனரின் நீழம் உன் கூந்தல்
அளவு வருமா..சிரிங்விராப்பைப்போல
கட்டித்தழுவ ஆவல்..
கொட்டித்தீர்த்து விடவே துடிக்குதடி நெஞ்சம்..

போர்க்கிளிப்போல் உன்னைத்தங்கிச்செல்வேன்
பெண்ணே..
கணக்குபோடும் கூட உன் நினைப்பு போகவில்லையே..
கனத்த காலனிகள் என் காலில்மட்டுமில்லை
மனதில் கூட உன்னைச் சுமந்தவனும் நானே..

காத்திருந்த காலம் காணுமடிக்கண்ணே ..
காதலனின் உள்ளம் பாவமடி பின்னே..
காதலேன்னும் கடலினுள்ளே கலந்துடுவோம் வா பெண்ணே..


Tool's in this poem

Shrink Wrap

pallets

safety shoes

forklifts