Thursday, December 31, 2009

அன்பென்னும் இராஜாங்கம் அமைந்திடச் செய்வோம்‏


இந்த உலகம் விசித்திரமானது. இதில் உள்ள மக்கள் ஆச்சர்யமான இயல்பு உடையவர்கள். தாங்கள் வளர வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் உடையவர்களால் தான் உலகம் முன்னேறுகிறது. புதிய புதிய மாற்றங்களை உலகம் பெறுகிறது. ஆனால் இந்த நேர்மறையான எண்ணத்தோடு உலகம் நிறைவு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தான் வாழ வேண்டும். வளர வேண்டும் என்பதோடு நில்லாமல் பிறர் அழிய வேண்டும் என்கிற குரூரமான எண்ணமும் எதிர்மறையான மனோபாவமும் இங்கிருப்பதுதான் உலகத்தின் சகல சிக்கல்களுக்கும் காரணம். பல குடும்பங்கள் முன்னேறாமல் போனதற்கு இந்தக் குணம்தான் காரணம். "நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மணிக்கணக்காகக் கடவுளிடம் வரம் கேட்கும் சிலர் "நீ விளங்கமாட்டே.. நல்ல இருக்க மாட்டே.." என்று நெருங்கிய உறவுகளைக்கூடக் கோபத்தில் சாபம் வழங்கி ஏசுகிறார்கள். எல்லோரும் வளர்ந்தால் உலகம் வளரும். ஒருவர் வளர்ந்து மற்றவர் கீழே போனால் அது முழு வளர்ச்சியாகுமா? அடுத்து என்ன நடக்கும்? கீழே போனவர் சும்மா இருப்பாரா? அவர் நாலு கோவிலுக்குப் போய் வேண்டுவார்.. என்ன வேண்டுவார்? "என் எதிரி இன்று நல்லா இருக்கிறானே! அவன் வாழலாமா! அவன் வளரலாமா! கடவுளே உனக்கு கண் இல்லையா? அந்தப் பயல் தெருவில் நிற்க வேண்டமா! அவன் கஷ்டப்படுகிற காட்சியை என் கண்ணால் நான் பார்க்க வேண்டாமா?" என்று வேண்டுவார்.

அவரது சாபம் இவரை வீழ்த்தும். இவரது சாபம் அவரை வீழ்த்தும். மொத்தத்தில் இருவரும் ஆரம்பித்த இடத்திலையே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் வளர விடாமல் செய்வதால் இருவருமே வளர முடியாது. ஒருவரை ஒருவர் ஓடவிடாமல் தடுப்பதால் இருவருமே ஓட முடியாது. இருவருமே புறப்பட்ட இடத்தில் இருக்க வேண்டியதுதான்.! இந்த உண்மையை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை.!

"நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மட்டுமே வேண்டுவது சுயநலம் என்றாலும் அதில் பெரிய குற்றம் இல்லை. ஆனால் உத்தம மனம் உடையவர்கள் "ஸர்வ லோகோ சுகினோ பவந்து" என்றுதான் வேண்டுவார்கள். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று வேண்டுகிற தாயுமானவர் தமிழே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

பலவிதமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு வாழ்வியல் முறைகள் உடையதே உலகம். உலகில் வாழ்பவர் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், பகைக்காமல், பிறரையும் பிறரது நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பழிக்காமல் புரிந்து கொள்ள கொஞ்சம் அக்கறையும் முயற்சியும் வேண்டும்.

மானிட பண்பாளர்களுக்குரிய தகுதியை நம்மில் வளர்த்துக் கொள்வோம், எமது கண்ணில் பிறருக்காக அழுவோம். பிரச்சனைகளாகவல்ல, தீர்வின் அங்கமாக நாம் இருப்போம். பிறக்கவிருக்கும் புதிய ஆண்டோடு சேர்த்து நம்மையும் புதிதாக பிறப்பித்துக்கொள்வோம். மாற்றம் ஒன்றே மானிட தத்துவம். மாற்றம் என்ற சொல்லைத் தவிர உலகில் அனைத்தும் மாறிவிட வேண்டும். எமது பண்புநலன் உட்பட. பண்பாளர்களுக்குரிய குணநலனைக் கொண்டு நம்மை பரிசோதித்து சீர்படுத்திக் கொள்வோம்.


01.பண்பாளர்கள் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் சிந்திக்கிறார்கள். தைரியத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்கிறார்கள். விருப்பத்துடனும் பெருந்தன்மையுடனும் கொடுக்கிறார்கள். அன்புடனும் பெரிய மனதுடனும் மன்னிக்கிறார்கள்.

02.தனிச்சிறப்புரிமைகளைவிட கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு; பாதுகாப்பைவிட சுதந்திரம் மதிப்பு மிக்கது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

03.கல்விக்கு கரையேதும் இல்லை: வாழ்க்கை என்பது முடிவே இல்லாத வளர்ச்சி இயக்கம் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

04.அழகின் சாரம் எளிமைதான் என்பதையும், நேர்மை தான் பண்புநலனின் அஸ்திவாரம் என்பதையும் புரிந்து வைத்திருக்கறார்கள்.

05. அளவற்ற செல்வத்தைவிட மகத்தான கருத்துக்கள்தான் நிரந்தரமானவை: அலங்காரச் சொற்களை விட நிதர்சனமாக எடுத்துக்காட்டுகள் கற்றுத்தருவது அதிகம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.

06. கற்றுக் கொள்ளுதல் என்னும் மெழுகுவர்த்தியில் ஆர்வம் என்பது திரியைப் போன்றது, வியப்பு என்பது சாகசங்கள் மற்றும் சாதனைகளை ஒளியேற்றுகிற நெருப்புப்பொறி என்பதை அறிந்திருக்கிறார்கள்.

07. தமது உள்ளங்களில் நன்றியுணர்வை நிரப்பி வைத்திருக்கறார்கள்: தம்மைப் படைத்தவனுக்கும் சக மனிதர்களுக்கும் தமது நன்றியை வெளிப்படுத்துவதில் புதிய வழிகளைக் கற்று கொண்டிருக்கிறார்கள்.

08. புதிய சவால்களை, வெவ்வேறு பண்பாடுகளை, பழக்கமில்லாத வழக்கங்களை, எதிர்மறையான கருத்துக்களை வரவேற்கிறார்கள், மதிக்கிறார்கள், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

09.அறிவுத்தாகம், உண்மையின் தேடல், ஞானத்தை அடைதல் இவற்றை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

10. தமது எல்லைகள் என்ன என்பதை அறிவார்கள், ஆயினும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தமது தனிச்சிறப்பை அறிந்திருந்தாலும் மனித குலத்துடன் ஒன்றிவாழ்வதை மதிக்கிறார்கள்.

இவை எம்மை பரிசோதிப்பதற்கான அளவு கோல். முதலில் மாற்றத்தை நம்மில் காண்போம். மானிடம் சீர்பட இலட்சிய வடம் இழுப்போம், அனைவரின் மனதிலும் இடம் பிடிப்போம், புதிய பாதையில் தடம் பதிப்போம். உடலைப் பலப்படுத்தி, மனதை செப்பமிட்டு குழந்தை மனதுடனும் நிறைந்த பண்புடனும் சிகரம் நோக்கி சிங்க நடை போடுவோம். உலகினில் எல்லோரும் உறவென்று சொல்வோம்; அன்பென்னும் இராஜாங்கம் அமைந்திடச் செய்வோம்.

போன காலங்கள் போகட்டும்: இனி புதிய வரலாறு படைப்போம்...!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

மகிழ்வுடன்: சுகிதரன்

Saturday, December 19, 2009

தர்சனின் காதல்கவிதைகள்..


பல்லாண்டுகளுக்கு முன்னர் U.P தர்சன் எனும் பதிவர் பதிவெழுதிவந்ததாக அவரது பழையபதிவுகளை பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள்...அவர் பதிவுலகில் பெண்கள் குறைவாக இருக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக பதிவுலகைவிட்டு விலகி பலகாலமாக வனவாசம் Sorry வீட்டுவாசம் இருக்கின்றார்..ஆடியகால்களும் எழுதியகைகளும் சும்மாயிருக்குமா?..அவரது இன்றைய பொழுது போக்கு என்ன தெரியுமா?..பல பெண்களை இவர்பின்னால் சுற்றவைப்பதுதான்..கூடிய சீக்கிரம் அவங்களெல்லாம் சேர்ந்து இவருக்கு ஜேர்மனியில் ரசிகர்மன்றம் அமைத்தாலும் ஆட்சரியப்படுவதற்க்கில்லை..

ஒரு நாள் இதைப்பொறுக்காத நான் அவரிடம் கேட்டேன்..எப்படி மச்சான் எங்களையெல்லாம்.ஒருத்திகூட திரும்பிப்பார்க்கிறாள் இல்லை உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் செய்யமுடியுது என்று...அதற்க்கு அவன் சொன்னான்..மச்சி அதுக்கெல்லாம் ஒரு தோற்றம் வேணும்டா..இப்ப என்னப என்னப்பாரு மாதவன்ட தம்பிமாதிரி இருக்கனில்லை..சரி அந்த கருமம் தான் உன்னட இல்லையே... சரி என்னுமொரு ஜடியா சொல்லித்தாறன்...என்று சொல்லி ஒரு டயரிய என்னிடம் தந்தார்..அதில இருக்ககவிதைகள் எல்லாம் அவனாக எழுதினதோ இல்லைன்னா எங்கையாவது பார்த்தெழுதினதோ தெரியவில்லை..

ஆனால் அவன் எனக்கும் அதைத்தரும்போது சொன்னான்...டேய் பிகர மடக்கனும் என்னா முக்கியமாக உனக்கு பேச்சுத்திறமையிருக்கனும்..அடிக்கடி ஜஸ்வைக்கத்தெரியனும்..அப்படியே இந்தகவிதைகளையெல்லாம் பாடமாக்கி வைத்துக்கொள்..அவங்களோட கதைக்கும் போது இடைக்கிடையில நீயா யோசிக்கிற மாதிரி பாவ்லா காட்டிட்டு ஒவ்வொரு கவிதையா எடுத்து விடு..அப்புறம் பாரு என்று சொன்னார்..நாங்களெல்லாம் ஒரு பொண்ணுகூட கதைக்கிறதே பெரியவிடயம் அதில எங்க கவிதை சொல்லிறது..உங்களுக்கு உபயோகப்படுமா என்று பாருங்கள்..


உன்னுடைய உதடுகள் உச்சரிக்கும் வரை நான் உணர்ந்ததில்லை என்னுடைய பெயர் இத்தனை அழகாய் இருக்கிறது என்று!!


என்னடி இது நியாயம்??? என் இதயத்தை திருடியவள் நீ தனிமை சிறையில் தண்டனை பெறுவது நானா???


என் மனம் உன்னிடம் உள்ளபோதும் ஏன் என் மனம் உனக்கு புரியவில்லை..


நினைக்கவில்லை... உன்னை நினைக்கவில்லை... மறந்தால்தானே உன்னை நினைப்பதற்க்கு!..

இதுக்குமேல அதில இருக்கதெல்லம் அவர் கஸ்டப்பட்டு கண்டுபிடித்த தொழில்முறை ரகசியங்கள்..அதைவெளியே சொல்லவது சரியில்லை..எனினனும் எல்லோருக்கும் தொரிந்த இலகுவான இரண்டு ஜடியாவை எழுதுகின்றேன்... அது ஒன்னுமில்லைங்க சினிமா டயலாக்குகளை அப்படியே உல்டா பண்ணிறது தான்..இது பெண்களுக்கு பிடிக்குமாம்..உதாரணத்திற்க்கு ...மாலினி நீ ரொம்ப அழகு....அல்லது நான் உன்னை காதலிக்கிறன் என்று நினைக்கல ஆனா இதெல்லாம் நடந்திடுமோ என்று பயமாயிருக்கு அப்படியிப்படின்னு அடிச்சுவிடுங்க..அப்புறம் பாடல்களையும் சுடவேண்டியது தான்.... வெயிலில் நீ நடக்கையலில் எனக்கு வேர்வைவரும் மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்.. உடல்கல்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று..........................(உங்கள் காதலியின் பேயரினை ரெண்டு தரம் எழுதவும்..) இதைவிட மேலதிக தகவல்களுக்கு எனது காதல்குரு தர்சனிடம் வினவுங்கள்...

Wednesday, December 16, 2009

A Moment To Remember (2004 )மறக்கமுடியாத காதல்




திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுகின்ற அளவுக்கு எனக்கு அதைப்பற்றிய போதிய அறிவு இல்லைங்கன்னா..ஆனாலும் நான் மிகவும் ரசித்துபார்த்த படங்களைப்பற்றி உங்களோடசில விடயங்களைப்பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்..

இன்று பார்க்க இருப்பது A Moment To Remember எனும் கொரியன் திரைப்படமாகும்.ஏற்கனவே நீங்கள் உலகத்திரைப்படங்களை பார்ப்பவர்களாக இருந்தால் இதனை நிச்சயம் பார்த்திருப்பீர்கள் எனநினைக்கின்றேன்.காதலில் தோல்வியுற்று விரக்தியடைந்த நிலையில் இருக்கும் பெண்ணிற்க்கும்
வாழ்க்கையில் இன்பத்தையே காணமல் துன்பத்தையே அனுபவித்து முரட்டுதனமாக வாழும் ஒரு இளைஞனும் எதிர்பாரதசந்தர்பந்தில் சந்திக்கின்றார்கள்..

மோதலுடன் தொடங்கும் சந்திப்புக்கள் மெதுவாக காதலாக உருமாருறுகின்றது..காதல்காட்ச்சிகளை பார்த்துகொண்டே இருக்கலாம்..மிக அன்றுபுதமாக படமாக்கியிருக்கின்றார்கள்..இவர்களின் காதல் அந்த இளைஞனைப் பொறுப்புள்ளவனாக்குகிறது..அவளுக்காக தனது தகுதியை முன்னேற்றதொடங்குகின்றான்.நல்ல வேலையிலும் சேர்ந்து காதலியையும் கைப்பிடிக்கின்றான்..இப்படிஒரு இன்பமயமாக சென்றுகொண்டிருக்கும் காதல்தம்பதிகளின் வாழ்க்கையில் அணுகுண்டாக வந்து விழுகின்றது ஒரு செய்தி...


அந்தப்பெண்ணுக்கு அடிக்கடி ஞாபகமறதிப் பிரட்சனை வந்ததால்..பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போகின்றாள்..அங்கு அவளைப்பரிசோதித்த மருத்துவர்..அவள் Alzheimer's disease எனும் அரியவகையான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்..அவளது மூளை சிறிது சிறிதாக இறந்து கொண்டிருப்பதாகவும்..அதன் முதல்கட்டமா அவள் சிறிது சிறிதாக தனது ஞாபகசக்தியை இழந்து தன்னனையே யார் என்று அறியமுடியாத நிலைமைக்கு ஆளாகிவிடுவார் என்றும் கூறுகின்றார்..

அந்த அதிர்ச்சியை தாங்கமுடியாத தாங்கமுடியாத அவள் தனது காதல்கணவன் இதனை எப்படித்தாங்குவான் என நினைத்து அவனிடம் இந்தவிடயத்தினை மறைக்கின்றாள்..தான் தனது ஞாபகங்களை முற்றுமுளுதாக மறந்துவிடமுன்னர்..தனதுகாதலனுடன் வாழ்ந்துவிடத்துடிக்கின்றாள்.உணர்சிவசமான இந்தகாட்ச்சிகளை அற்புதமாக வடித்திருக்கின்றார்கள்..

பின்பு தனதுகாதலி தனது நினைவுகளையும் உயிரையும் மெதுவாக இழந்து கொண்டிருக்கின்றாள் என்பதனை காதலன் உணரும் காட்ச்சிகள் உயிரோட்டமாகவும் கண்களை கலங்கவும் வைக்கின்றது..அதன்பின்னர் வரும்காட்ச்சிகள் கவிதைகள்...அதைவிபரித்து கூறுமளவிற்க்கு எனக்கு திறமைபோதாதது.நீங்களே திரையில் பார்த்து அனுபவிக்கவேண்டிய இனியஅனுபவம் அது...

.நடிகர்கள் ஒவ்வொருத்தரும் போட்டிபோட்டுக்கொண்டு நடிக்கின்றார்கள்..அதுவும் அந்த நடிகை... சும்மா பார்த்துகிட்டே இருக்கலாமுங்க..நீங்க நிச்சயமாக பார்க்கவேண்டிய படமுங்க பார்த்திட்டு சொல்லுங்க எப்படியிருக்கிறது என்று...

ஆன்லைனில் இத்திரைப்படத்தைப்பார்ப்பதற்க்கு..
http://www.youtube.com/view_play_list?p=248CAEBCDFB3EFB4&search_query=A+Moment+To+Remember

http://www.letmewatchthis.com/watch-22120-A-Moment-to-Remember--Nae-meorisokui-jiwoogae

பதிவிறக்கம் செய்துபார்ப்பதற்க்கு..

Tuesday, December 15, 2009

வேட்டைக்காரன் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்..


அண்ணன் விஜய் மேல எனக்குதனிப்பட்ட வேறுப்பு எதுவும் இல்லைங்கண்ணா..வேட்டைக்காரன் ரிலீஸ் நெருங்க நெருங்க எங்கபார்த்தாலும் அதைப்பற்றின போச்சுத்தானுங்க...இப்பவே எஸ்.எம்.எஸ் பறக்கத்தொடங்கிவிட்டது..அப்படி எனக்கு நண்பர்களினால் அனுப்பபட்ட சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்..

ரசிகர்:- எனுங்கண்ணா சாக்கடைக்குப்பக்கத்தில போய் சத்தமா கத்தீட்டு இருக்கீங்க?..
விஜய்:- சாமிக்கிட்ட மட்டும் தான் சைலன்சா போசுவன்... சாக்கடைக்கிட்ட இல்லை..

இவரு எப்படி 'சைலன்ஸா' பேசுவாருன்னு பிரஸ்மீட்டிங்கிலயே பார்த்திருப்பீங்க தானே..

which is the painful way of death? Poison, Murder, Accident!, Tsunami!!! DOnt worry. its simple very very simple. Watch '' Vettaikaran''..


எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?.. எம்ஜீஆர் வில்லங்களை பழிவாங்கினார்..விஜய் ரசிகர்களையே பழிவாங்கிறார்..


‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?
அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை...


குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...

"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."

reporter : ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன?


NDTV TV FLASH NEWS:

Bin Laden talks to ndtv
he was quoted saying
"VETTAIKARAN" release kum engalukum endha samdhamum illa,
naanga andha alavuku bayangaramanavangalum illai.


வேட்டைக்காரன் பஞ்ச்..

ஒருத்தன மட்டும் கொலைபண்ணினா அவன் கொலைகாரன்...
படம் பார்க்கிற எல்லாரையும் கொலைபண்ணினா அவன்தான் வேட்டைக்காரன்.


2020 ஆண்டு.. குழந்தை:-அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா:-ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை:-அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..

வேட்டைக்காரன் பாடல்:
”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,
ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,
படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”

படம் பார்த்த பின்பு:
“நிக்காம ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வாரேன் பாரு வேட்டைக்காரன்!.”

திரையரங்கிலிருந்து தப்பித்த பின்பு:
”என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது
படத்த பார்க்கையில கிர்ர்ருங்குது,
டர்ர்ருங்குது”

இறுதியில் படத்தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம்:
”நான் அடிச்சா தாங்க மாட்ட,
மவனே இனி நீ நடிக்க வர மாட்ட
மக்களை வாழு வாழு வாழ விடு
வாரேன் பாரு'கொலைகாரன்'




நன்றி-http://sms4vijay.blogspot.com

.

Monday, December 14, 2009

ஓரு நிமிடத்தில் மெலிந்த உருவம் பொறுவது எப்படி?..

மெலிவான தோற்றத்தை பேறவேண்டும் என்பதற்க்காக பல பேர்பலவிதமான கஸ்டங்களை அனுபவித்து உடற்பயிற்ச்சி செய்து உணவுக்கட்டுப்பாட்டு முறைகளை கைப்பிடித்து உடம்பினை பராமரிக்கின்றார்கள்.அத்துடன் பருத்த உருவம் உடையவர்கள் தமது புகைப்படங்களினை தாழ்வுமனப்பான்மை காரணமாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.அப்படியானவர்களுக்கு வரப்பிரசாமாக இந்த ஒன்லைன் மென்பொருள் உதவுகின்றது..

இந்த இணையத்தளத்தில் உங்களது புகைப்படத்தை பதிவேற்றியதும்..அதில் உங்கள் முகவடிவத்தை கணக்கொடுத்து அதற்க்கேற்ற மாதிரி உங்கள் உடல் அமைப்பை குறைத்துக்கொள்ள முடியும்..

உங்கள் வீட்டுத்தோட்டம் ஒரு மீன்தொட்டியினுள் இருந்தால்..

நீங்கள் இயற்க்கையின் அழகினில் மனம்லயிக்கும் ரசனையுள்ளவரா?..பச்சைப்பசேலேன இருக்கும் இயற்க்கைகாட்சிகளை கண்பதற்க்கு விரும்புகின்றவாரா?இன்றைய இயந்திரத்தமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழக்கின்றோம்.நகரங்களில் வாழ்பவர்களுக்கு அனேகமாக பசுமையான காட்ச்சிகளை காண்பதே அரிதானவிடயமாகஇருக்கின்றது..
ஒரு ரம்மியாமான எழில்கொஞ்சும் தோட்டம் உங்கள் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்?..அதுவும் உங்கள் வீட்டுமீன்தொட்டியினில் இருந்தால்..(உடனே எங்க வீட்டு மீன்தொட்டியிலும் தோட்டம் இருக்கு என ஒன்றிரன்று கடல்தாவரங்களையும் பிளாஸ்டிக் மரங்களையும் வைத்துக்கொண்டு சொல்லவராதீர்கள்)..இப்படியான இயற்கைதோட்டத்தினை உங்கள் மீன்தொட்டியினுள் உருவாக்கித்தரும் பணியினை "Nature Aquarium Style' செய்துதருகின்றார்கள்.



உண்மையான இயற்க்கைத்தாவரங்களை பொன்சாய் முறையில் வளர்த்து இதற்க்காக பயன்படுத்துகின்றார்கள்..மீன்தொட்டி என்னேரமும் தெளிவாக பார்க்ககூடியதாக இருக்கவேண்டும் என்பதற்க்காக விசேடபில்டர்களை உபயோகப்படுத்தியுள்ளார்கள்..உங்கள் ரசனைக்கேற்றபடி தோட்டத்தினை வடிவமைத்துக்கொடுக்கின்றார்கள்.இதை உருவாக்கியவர்களான ஜோர்ஜ்ம், ஸ்டிவனும் இதைப்பற்றி கூறுகையில் இவை சாதரணமீன்தொட்டிகள் அல்ல நந்தவனங்கள் எனக்குறிப்பிட்டார்கள்..உங்களில் வீடுகளில் மினித்தோட்டங்களை வளர்க்க நீங்கள் தயாரா?..




Sunday, December 13, 2009

அவதாருடன் மோதவரும் வேட்டைக்காரன்..




உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஜேம்ஸ் கமருனின் அவதாருடன் போட்டி போடுவதற்க்கு கோலிவுட்டில் இருப்பவர்களே பயப்படும் போது எமது இளையதளபதி தைரியாமாக அதற்க்கு போட்டியாக தனது வேட்டைக்காரனை சன்டிவியின் துணையுடன் வெளியிடுகின்றார்..
இதைப்பற்றி மேலதிகமாக வரும் தகவல்களின்படி ஜேம்ஸ் கமருன் என்னதான் சிறந்த படங்களை எடுத்து இருந்தாலும்..அவர் இந்தமுறை வேறும் தொழில்நுட்பத்தையையும் மென்மையான காதலையும் வைத்துக்கொண்டு தான் களமிறங்குகிறார்..ஆனால் போரரசு போன்ற உலக இயக்குனர்களிடம் பணியாற்றிய எமது குத்தாட்ட நாயகன் இளையதளபதியின் கமர்சியல் பஞ்சாமிர்தத்துடன் ஒப்பிடுகையில் அதாரால் தாக்குப்பிடிக்க முடியாது என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசிக்கொள்கின்றார்களாம்..

அத்துடன் ஒரே படத்தின் ரையிலரை திருப்பி திருப்பி போட்டதில் சன்டிவி உலகசாதனை படைத்துள்ளதாம்.இந்த சாதனையை பதிவதற்க்காக சென்னை வந்த கின்னஸ் குழுமத்தினர்..தமிழ்நாட்டு மக்களின் பொறுமையை பாரட்டி..உலகத்திலயே பொறுமையான மக்கள் என்ற சாதனையை இவர்களுக்கே கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்..
உலகம் முழுவதும் அவதாரின் ரையிலர் எத்தனை தடவை தொலைக்காட்ச்சியில் காட்டப்பட்டதோ..அதைவிட இருமடங்கு கூடுதலாக சன்டிவி வேட்டைக்காரன் ரையிலரை போட்டிருகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..

முக்கியமான விடயமான இசையைப்பொறுத்தவரையில் எமது நாக்கு மூக்கா இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் குத்தாட்ட சிங்களகாப்பி இசையைக்கேட்டால் அவதாரின் இசையமைப்பாளர் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என ஓடிவிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..உலகத்தமிழர்களின் எதிர்ப்பை பற்றிகேட்ட பொழுது அவர்கள் முதல்ல இப்படித்தான் எதிர்ப்புன்னு சொல்லுவாங்க அப்புறம் அனுஸ்காவின் இடுப்பை பார்ப்பதற்க்காக ஓடிவந்திடுவாங்க என நக்கலாக தெரிவித்தார்கள்..

Saturday, December 12, 2009

போட்டோ ஷாப் கிராபிக்ஸ் கலக்கல்

எத்தனை நாளைக்கு தான் இளிச்சவாயாச்சியாக இருக்கிறது..ஒரு கை பார்த்திடவேண்டியதுதான்!.
ஹிஹி இல்லங்க ஓவரா வெய்யிலில சுத்தினதால தான் பிள்ளை கருப்பாகிடிச்சுன்னு நினைக்கிறன்..
கலைப்பொருட்களை எல்லாம் பக்குவமாக போட்டோ எடுக்கிறது எப்படின்னு நான் இப்ப செய்துகாட்டுறேன் பாருங்களேன்..
தன்கையே தனக்குதவின்னு தெரியாமலா சொன்னாங்க!...
வேகமாக ஓடுகன்னா..சமத்து குதிரையில்ல வேகமா போடகண்ணு...
பக்கத்தில வா..உன்ன எமலோகத்துக்கே அனுப்பிறன்..
நாங்க இப்பவிளையாடிட்டு இருக்கது கால்பந்தா கபடியா?..
ரோடு நல்ல இருந்தா எப்படி எங்களுக்கு வருமானம் வரும்..
இப்ப எப்படி தப்பிக்கிறாங்க என்று பார்ப்போம்.

Friday, December 11, 2009

போட்டோ சோப் கலாட்டா பாகம் 3

நாங்கல்லாம் கோடுபோடச்சொன்னா ரோடே போடுவம்...
கையில பலம் இருந்தா போதுமா?..விரலில வேணாமா?..
நல்லாப்பாத்துக்கங்க நான் தான் சிங்கம்..(நம்ம கேட்டப்ப பார்த்திட்டு ஆஸ்கருக்கு கூப்பிடபோறங்க பாருங்களேன்..)
அப்படி என்னதான்டா வெளியால நடக்குது..நாங்களும் பார்க்கனுமில்லை..
நல்ல போஸ்...பல்லுங்க எல்லாம் தத்துரூபமா வந்திருக்குது...
காலங்கள் மாறும் காட்ச்சிகள் மாறுமென்று சொல்லுறாங்க..ஆனா அப்படியொன்றும் நடக்கிறமாதிரி தெரியலயே..


ஓவரா தண்ணிய ஊத்தி வளத்திட்டாங்க போல இருக்கு...

சூறாவளியில நான் மாட்டுப்பட்டகதை


பதிவுலகில் பல நல்ல எழுத்தாளர்களினைப்படித்து படித்து நானும் ஏதாவது எழுதித்தான் பார்ப்போமே என்று தான் வலைப்பதிவு எழுதவே ஆராம்பித்தேன்.ஆனாலும் என்ன எழுதிறது என்று தெரியாததாலயே..பல நாட்கள் யோசிச்சு யோசிச்சு மண்டைகுளம்பிப்போய் ஒன்றுமே எழுதாமவிட்டுட்டேன்..இப்ப என்னுடைய வாழ்க்கையில நடந்த சில சுவாரஸ்யாமன (அப்படின்னு நான் நினைக்கிற)விடயங்களை எழுதலாம் என்று நினைக்கிறன்..எதில இருந்து ஆரம்பிக்கிறது எதிலமுடிக்கிறது என்று ஒரு ஜடியாவும் இல்லை. சூறாவழில இருந்து ஆரம்பிப்பம்.

.சில வருடங்களுக்கு முன்னால கொழும்பில மினி சூறாவளி வந்ததது இல்லை அதைப்பற்றித்தான் சொல்லப்போறன். ஒரு வழக்கமான பகல்நேரத்தில புத்தகப்பூச்சியான நம்ம ஹீரோ புத்தம் படிக்கிறதுக்காக லைபரரிக்கு போனாரு..( ஹீரோவா எவன்டா அவன் என்று நீங்க கோவத்தோட கத்துறது கேட்கிது)..ஆனா என் கதையில நான் தானுங்க ஹீரோ அதால கொஞ்சம் பொறுத்தருளுங்கள்.. புத்தகத்தோட புத்தகமாக புதைஞ்சுபோய் இருந்த சமையத்தில திடிறென்று லைபரரிக்கு வெளியால பலமான கூச்சல் சத்தங்கள் கேட்டது..உடனே வெளியால என்னதான்டா நடக்குது என்று பார்க்கிறதுக்கான ஓடிப்போனோன்..பராக்கு பார்க்கிறதுக்கு எங்களை மிஞ்சமுடியுமா?

அங்கவந்துபார்த்த எல்லாரும் ஒரு திசையைப்பார்த்து ஓடிட்டு இருந்தாங்க.என்னங்கடா எல்லாரும் ஓடுறாங்க..இலவசமா சாப்பாடு போடுறாங்களோ இல்லை யாரவது சண்டை பிடிச்சிட்டு இருக்காங்களோ என்று பார்க்கும் ஆவளினால் நானும் அவங்களை பின்தொடந்து ஓடிப்போனேன்.. திடிரென்று ஒரு இடத்தில நிண்டு வானத்தை பார்த்திட்டு இருந்தாங்க.. நான் நின்றுகொண்ட இடத்தில் வெயிலோடு தெளிவா இருந்தவானம் அவங்க பார்த்திட்டு இருந்த திசையிலோ கரும்முகிள்கலோடு மழைவானம் மாதிரி மின்னல்களோடு பார்க்கவே பயங்கரமாக இருந்தது...திடிறென்று அந்த திசையிலிருந்து குளிர்காற்று வீசத்தொடங்கியது..எனக்கு அப்பொழுது என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை ஏதோ அதிசய மாஜிக்நிகழ்சிய தொலைக்காட்ச்சியில அதிசயமா பார்க்கிற மாதிரி பார்த்திட்டு இருந்தன்..என்னுடைய கையில் லைபரரி புத்தகங்களும் குடையொன்றும் இருந்தது..அந்த குடை வழியில ஒருத்தர் எங்கவீட்டில இருந்து இரவல்வாங்கிட்டுப்போன குடைய வழியில என்னப்பார்த்து கொடுத்திட்டு போய்ட்டார்..வீணா இதையும் காவவேண்டி வந்திட்டுதோ என்று எரிச்சலுடன் இருந்த எனக்கு இப்ப மனதிற்க்குள் கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டது..எல்லாரும் மழையில நனையப்போறங்க நான்மட்டும் குடைவச்சுட்டு இருக்கனே என்று..

இதமாக வீசிக்கொண்டிருந்த குளிர்காற்று மிகவிரைவாகவே வலுக்கத்தொடங்கியது.அதனுடன் இணைந்து மழைத்துளிகளும் எங்களை நனைக்கத்தொடங்கியது..உடனே நானும் பந்தாவா குடையை விரிச்சு பிடிச்சுகிட்டன்..ஆனால் குடையை பிடிச்சுக்கொள்ள முடியாமல் காற்று தள்ளிக்கொண்டிருந்தது..நான் இதனுடன் மல்லுக்கட்டிட்டு இருக்கும் போது எனக்கு முன்னாடி இருந்த கூட்டத்தினர் அலறிஅடிச்சுக்கிட்டு பின்னாடி ஓடத்தொடங்கினார்கள்..நான் என்னடா நடக்குது என்று பார்க்கும் பொழுது யார்வீட்டிலோ போட்டிருந்த கூரை ஒன்று என்னை நோக்கி பறந்து வந்தது..இது எல்லாம் சில வினாடிகளுக்குள் நடந்துமுடிந்து விட்டது..நான் உடனே சுதாகரித்துக்கொண்டு பின்னோக்கி ஓடத்தொடங்கினேன்.காற்றுபலமாக வீசியதால் எனதுகுடை உடைந்து முன்னோக்கி பறந்தது..நான் கையில் வைத்திருந்த புத்தகமும் கைதவறி கிழே விழுந்தது..நான் பதறியபடி அதை பாயந்து எடுத்துக்கொண்டு பின்னோக்கி பார்த்தேன்..அந்தக்கணம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அந்தகாட்ச்சியினை கண்டேன்.

.இருண்டவானம் சூழ மின்னல்கள் வானம் முழுவதும் பரவலாக மின்னிக்கொண்டிருக்க ஒரு கரியநிறத்தில் பெரிய சுழல்காற்றுடன் ஒரு சூறாவழியொன்று என்பின்னே வேகமாக வந்துகொண்டிருந்தது..நான் இதுநாள்வரை சூறாவழியினைப்பற்றி ஒரு சில கொலிவுட் படங்களில் பார்த்து இருந்தாலும் நேரடியாகப்பார்த்ததில்லை..இன்னும் இங்கே இருந்தால் சட்டினி ஆகவேண்டியதுதான் என்று தொரிந்தால் தடுமாறிய கால்களுடன் வேகமாக ஓடத்தொடங்கினேன்..சிறிது நேரம் ஓடியபோது ஆகண்ட ஒரு மரத்தினைக்கண்டேன்..இதன்பின்னால் ஒழிந்துகொணடால் என்ன? என என்மனம் சொல்லியது..ஆனாலும் வேண்மாம் வீடுபக்கம்தானே அங்கயே போய்விடுவோம் என வேகமாக ஒடினேன்..என்மீதி எதேதோ சிறியபொருட்கள் வந்து மோதியது..அதனை எல்லாம் நான் கவனிக்கும் நிலையில் இல்லை..எனது வீடுகண்ணில் பட்டதும் எனக்கு சொர்க்கத்தை கண்டமாதிரி ஒரு ஆனந்தம்..

வேகமாக ஒடிப்போய்கதவை திறந்து.உள்ளே பாய்ந்து அம்மா சூறாவளி என பலமாக கத்தினேன்..தொலைக்காட்ச்சி பார்த்துகொண்டிருந்த அனைவரும் எனது கூச்சலை கேட்டுபதறி ஒடிவந்தர்கள்..எனது தங்கை யன்னல் அருகில் அமர்ந்து இருந்தவன் என்னை நோக்கி எழுந்து வந்த மறுநிமிடம் அந்த யன்னல்கள் வேடித்துச்சிதறியது.எமது வீடு இப்பொழுது அந்த சூறாவளியினுள் மாட்டியிருந்தது என அறிய முடிந்தது..அந்த சில நிமிடங்கள் நாங்கள் அனைவரும் பயத்தில் உறைந்துபோய் இருந்தோம்;..வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தது..யன்னல்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி கண்ணாடிகள் வெடித்து சிதறியது..வீடே முறிந்து விழுந்து விடபோகின்றதே என பயந்தோம்..வீடு நடுங்கத்ததொடங்கியது..தங்கை பயத்தினால் அலறத்தொடங்கினால் ..இவையனத்தும் சிலநிடங்கள் மட்டும்தான்..திடிறென்டு யா னஅமைதி நிலவியது..புயல் எங்களை கடந்து போய்விட்டது என அறிந்துகொண்டோம்..மெதுவாக வெளியாக வந்துபார்த்தோம்..

வீதியெங்கும்..உடைந்த தளவபாடங்கள் இலைகுலைகள் வீட்டின் கூரைகள் சிதறிக்கிடந்தன..எல்லோரும் பயத்துடன் வீட்டிறக்கு வெளியே வந்து பார்த்திட்டு இருந்தாங்க.. நான் வீதியின் சுற்றும்முற்மும் பார்த்தபடி நடக்கத்தொடங்கினேன்..எல்ல இடமும் சேதங்களே காட்ச்சி அளித்தன..நான் வந்தபாதையினை பார்த்ததும் எனக்கு பகீர்என்று இருந்தது..ஏன் என்றால் நான் அப்பொழுது பின்னால் ஒழுpந்துகொள்ளலாம் என நான் நினைத்த அகண்ட மரம் யாரே கையால் பிடித்து முறுக்கிபோட்ட மாதிரி முறுகி சிதிலமடைந்து கிடந்தது..என்னைக்காப்பற்றின கடவுளுக்கு நன்றி சொல்லியபடி திரும்பி வந்தேன்.எங்கள் வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த கடையில் வேலைசெய்த பெடியன் கடையின் முகப்பில் இருந்த கூரையில் ஏறி என்னவோ செய்துகொண்டிருந்தான்..நான் அந்தகூரையின் கீழேபோய் நின்றபடியே
அவனும் பேச்சுக்கொடுத்தேன்..திடிறென்று கிறீச்சுடிடும் சத்தம் எங்கோ கேட்டது..அது அந்த கூரையில் இருந்து தான் கேட்டிருக்கவேண்டும் என உணர்ந்து அங்கிருந்து வேகமாக வெளியால் ஓடினேன்...வேளியே வந்து திரும்பி பார்க்கும் போது அந்தக்கடையின் கூரை அவனோடு சேர்ந்து மொத்தமாக கிழே விழுந்தது நொருங்கியது..நான் சிறிது தாமதித்திருந்தால் நானும் அங்கு மாட்டியிருப்போன் என உணாந்த போது முள்ளந்தண்டு சிளிர்த்தது..ஒரே நாளில் இரண்டு கண்டங்களில் இருந்து தப்பிய கதை இதுதானுங்க..கொஞ்சம் நீளமாம்போச்சுதா..நாங்க இப்பதானே எழுதிப்பழகிறேன்;..குறைகளை நிறைகுறைகளை சுட்டிக்காட்டுங்க நண்பர்களே..அப்பதான் நானும் முன்னேற முடியும்..

போட்டோ சோப் கலாட்டா பாகம் 2



இப்படியெல்லாம் டகால்டி வேலை பார்த்த தான் நாலு போரு நம்மல மதிப்பாங்க..ஓவரா படிச்சா இப்படித்தான்...


சமத்து கரடியில்ல நீயாவந்து இந்த கூண்டுக்குள்ள புகுந்துக்கோ...

இப்படி ஒரு கம்பியுட்டர் எங்கவிக்குது என்று சொல்லுங்க?எனக்கும்
ஒன்று வேண்டும்..
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்..அப்ப நானும் சிங்கம்தானே?..

எவண்டா அவன் குருவி விஜய்...அவனைப்பழிவாங்காம விடமாட்டன்..

எனக்கா சூடுவைக்கிற..உனக்கு வைக்கிறன்டி ஆப்பு...

இன்னைக்கு எந்த முஞ்சியை வைச்சிட்டு கடன்காரன் முகத்தில முழிக்கலாம்..