

அவர்களது பறக்கும் தட்டு சிறிய ஓடமாகவே இருப்பதால்.அவர்கள் அண்டவெளியில் ஆகத்தொலைவில் இருந்து வந்திருக்கமுடியாது.
ஏனெனில் அந்தச்சிறிய ஓடத்தினால் பலகோடி பில்லியன் தூரத்தினை
கடந்து வருவதற்க்குரியஎரிபொருளையோ ,உணவுக்களஞ்சியப்படுத்தலையோ
கொண்டிருக்கமுடியாது.இதுவரையில் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் எந்த உயிரினமும் வாழவதற்க்கான சாத்தியக்கூறு காணப்படவில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.
ஆகையால் அந்த உயிரினம் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்ததென்பது நியாயப்படுத்த முடியாத வாதமாகிவிட்டது.எனவே எனது கருத்தென்னவெனில் அவர்கள் வேற்றுக்கிரகவாசிகளல்ல இந்தப்பூலோகத்தைச் சேர்ந்தவங்களே ஆகும்.ஆனால் அவர்கள் இப்போது இந்த உலகத்தில்வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இல்லை... கிட்டதட்ட 3000 அல்லது 4000 ஆண்டுகள் பிற்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் ஆகும்.
இதனைப்பற்றி விரிவாகப்பார்ப்போமாயின் அங்கிகளின் கூர்ப்புக்கொள்கை (Theory of oragaic Evaloution)யினைப்பற்றி நீங்களஅறிந்திருக்கலாம்.
இங்கிலாந்தைச்சேர்ந்த இயற்க்கை விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வின்(1809-1882) அவர்கள் இந்த கொள்கையினை உருவாக்கினார்.ஒரு விலங்கு தனது சூழலுக்கு தகுந்தபடி காலப்போக்கில் தன்னை இயைபாக்கம் அடையச்செய்கின்றது என்பதாகும்.மனிதனுக்கு இந்த பாலமான கைகளும், கால்களும் வாய்த்திருப்பதற்க்கு காரணம் அவன் கடினமாக உழைத்து வேலை செய்யவேண்டியிருப்பதினாலும் அவனது தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ளுவதற்க்காகவும் ஆகும்.
ஆனால் இப்பொழுது மனிதன் நவீன உபகரணங்களையும் , பலவிதமான தொழில்நுட்பத்தினையும் கண்டுபிடித்திருப்பதால் அவனுக்கு கடினமான வேலை செய்ய வேண்டிய செய்யவேண்டிய அவசியமில்லாமல் போகின்றது.மூளை மட்டும் மிகமுக்கியமானதாகவும் , இப்போது காணப்படும் வழுவான கை, கால்கள்க்கொண்ட உடல் தேவையற்றதாக மாறிவிடும். இதனால் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் போது மனிதனது உடல் தேவையற்றதாக மாறிவிடும்..
இதனால் பல்லாயிம் ஆண்டுகள் செல்லும்போது மனிதனது உடல் இதற்கான இயல்பாக்கத்தை அடைந்து மெல்லிய கை, கால்ளைக்கொண்ட குறுகிய உடலாகவும் தலை மட்டும் அசாதாரணமாக வளாந்து பெருத்துக்காணப்படும். என ஒரு பிரபலமான விஞ்ஞானி அறிக்கை விட்டுள்ளார்.அவர்குறிப்பட்ட அந்தத் தோற்றம் இன்றைய மக்கள் கண்டதாகக்கூறப்படுகின்ற வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

இதன் மூலம் வேற்றுக்கிரகவாசியெனக்கூறப்படுபவர்கள்.இந்தப் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் தான் ஆனால் இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல... பல்லாயிரம் ஆண்டுகள் பிற்பகுதியில் வாழந்துகொண்டிருக்கும் மனிதர்கள் தான் என்பதை ஓரளவு ஊகிக்கலாம்.
அவர்களால் எப்படி இந்தக்காலத்திற்க்கு வரமுடியும் என நீங்கள் யோசிக்கலாம்.இன்றைய நூற்றாண்டிலேயே மனிதன் இவ்வளவு சாதனைகளைப்புரிந்துவிஞ்ஞாத்திலே கரைகண்டு பால்வீதியினையே தனது கண்பார்வைக்குள் வைத்திருக்கிறான் என்றால் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்திருக்கும் போது எத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருப்பான்.இந்தப் பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கத்தொடங்கியிருப்பான். தொழில்நுட்பம் , விஞ்ஞானம் ஆகிய இரண்டினதும் எல்லையினைத்தொட்டிருப்பான்.

எமது பிரபஞ்சத்தில் (black holes) கருந்துளை அல்லது கருமைத்துவாரங்கள் என அழைக்கப்படும் இறந்த நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றின் அருகே செல்பவர்களுக்கு நேரம் மெதுவாகவே நகரும். ஆனால் இங்கே பூமியில் இருப்பவர்களுக்கோ நேரம் வழமை மாதிரியே ஓடும்.இந்த நேர இடைவெளி பூமியிலே பல வருடங்களுக்கு சமமானதாகும்..
இந்த கருந்துளைகள் எப்படி உருவாகின்றது என்றால் நட்சத்திரங்கள் பலமில்லியன் வருடகாலத்துக்கு வாழ்கின்றன இறுதியில் அவற்றுக்கும் அழிவுகாலம் வருகின்றது.தனது அணுசக்தி முழுவதும் முடிவடைந்ததும் ஈர்ப்புச்சக்திக்கு ஈடுகொடுக்கமுடியாது நட்சத்திரமானது சுருங்கத்தொடங்குகின்றது.இவ்வாறு இன்னமும் அதிகமாக சுருங்கி மாபெரும் அடர்த்தியுடன்கூடிய ஒரு புள்ளிப்பொருளாகலாம்.இதுவே கருமைத்துவாரமாகும்.
இன்றே பால்வீதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதன் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்திருக்கும் சமயத்தில் கருமைத்துவாரத்தை கைப்பற்றி அதன் நேர மாற்ற கோட்பாட்டினை ஆராய்ந்து நேரத்தை வெல்லும் கலையை அறிந்து விஞ்ஞான கற்பனை கதையில் வந்ததை போன்ற ஒரு டைம் மெசினை(time machin)தாயரிக்கலாம்.

இதன் முலம் மனிதனால் நேரத்தை தனது ஆட்சிக்குட்பட்டதாக மாற்றமுடியும்.நேரத்தை வெல்லுவதன் முலம் கடந்த காலத்திற்க்கு சென்று வருவதற்க்கான கலையை கண்டுபிடித்திருக்கலாம்.இப்படி கடந்த காலத்தில் இருந்து வந்தவர்களை கண்ட பூலோகமக்கள் அவர்களின் பிரமிக்கவைக்கும் தொழில்நுட்பவளர்ச்சியைக்கண்டு அஞ்சி தங்களை விட உயர்ந்த தொழில்நுட்பத்தினை கொண்ட இவர்கள் வேறு கிரகமொன்றில் இருந்து வந்விருக்கவேண்டும் என முடிவெடுத்திருக்கின்றார்கள்.
வேற்றுக்கிரகவாசிகளாக இருந்திருந்தால் அவர்கள் மேலோட்டமாக பூமியில் ஆராய்ச்சி செய்யாமல் நேரடியாக தரையிறங்கி பூமியிலுள்ளவர்களுடன்தொடர்பு கொண்டிருப்பர்கள்.
ஆனால் இந்த மனிதர்களோ தமது சிக்கலான தொழில்நுட்பத்தினை இன்றையமக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதனாலும் அப்படியே அறிந்துகொண்டால் அவர்களது இயல்புவாழ்க்கை மாறிப்போய் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற பயத்தினாலுமே இந்த பூமியில் சட்டபூர்வமாக தரையிறங்காமலும் ,தடயங்களையும் , சாட்ச்சிகளை மறைத்தும் சாதுர்ரியமாக வந்து செல்லுகின்றார்கள் என்பதை ஊகிக்கமுடிகின்றது.எனவே இந்த கருத்து அலட்ச்சியப்படுத்தப்படவேண்டியதல்ல ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவேண்டியது என நிச்சயமாகக்கூறாலாம்.