Tuesday, January 6, 2009
நான் ரசித்த கவிதைகள் பாகம் 2
1.சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புக்கள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
செல்லியிருப்பானா?
2.கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!
3.மெள்ள நகரும்
பேருந்தின் ஐன்னலின்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக்குழந்தை
டாட்டா காட்டுகின்றது
பஸ் பயணிகளுக்கு!
4.விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
5.பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டும் என்று.
நன்றி ஆனந்த விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
i like this kavithai..very nice
நன்றி அனானி...
Post a Comment