Sunday, May 18, 2008

ஒரு புன்னகையால்....


பார்ப்பரா ஹாக் என்னும் 13 வயதுச்சிறுமி எழுதிய இந்தக்குட்டி கதையை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன்!
சோகமாக தோற்றமளித்த ஒருவனைப்பார்த்து ஒரு பெண் புன்னகைத்தாள்.அவன் மனம் லேசானது.உடனே பழைய நண்பன் செய்த உதவி ஏதோ நினைவுக்கு வர, வீட்டுக்குப் போன கையோடு நன்றி தெரிவித்து நண்பனுக்கு ஒரு கடிதம் போட்டான்.ஹோட்டலில் உணவருந்திக்கொண்டிருக்கும் போது அந்தக்கடிதத்தை எடுத்துப்படித்த நண்பன் நெகிழ்துபோனான். வெயிட்டருக்குப்பெரிதாக டிப்ஸ் வைத்தான்.வெயிட்டர் மேலும் உற்சாகமடைந்து பணிபுரிய, முதலாளியிடமிருந்து அவனுக்கு ஒரு பெரிய போனஸ் கிடைத்தது. முதல் போனஸ்என்பதால், அதில் பாதியை ஒரு ஏழை நண்பனுடன் பகிர்ந்துகொள்ள, அந்த ஏழைதன் வீட்டுக்குத்திரும்பும்போது மழையிலும் குளிரிலும் நடுங்கிக்கொண்டிருந்த ஒருநாய்க்குட்டியை ஆதரவோடு தன்னுடைய குடிசைக்கு எடுத்துச்சென்றான்.இரவில் அந்தக்குடிசை தீடீரெண்டு தீப்பிடித்துக்கொள்ள,அந்த நாய் தொடர்ந்து குரைத்தது.தன்னைத் துக்கிச்சென்றவரையும் அவருடைய குழந்தைகளையும் தக்க தருணத்தில் எழுப்பிக்காப்பாற்றியது.மறுபடியும் சிரமப்பட்டு உழைத்து குடிசையை தந்தை உருவாக்கியதைப் பார்த்து அவரது சிறிய மகனின் மனத்தில்உறுதி பிறந்தது.சிறப்பாகப் படித்து பட்டம் பெற்ற பிறகு,சமுகசேவையில் இறங்கிஉழைத்த அந்தச்சிறுவனை - அவரை - மக்கள் தங்கள் நாட்டுக்கு ஜனாதிபதியாகத்தேர்ந்தெடுத்தார்கள். ஆம்! இத்தனையும் முதன் முதலில் அந்தப் பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட அந்த ஒரே ஒரு புன்னகையால்!.

3 comments:

Anonymous said...

hi hi this is realy superw da...

KARTHIK said...

//பார்ப்பரா ஹாக் என்னும் 13 வயதுச்சிறுமி எழுதிய இந்தக்குட்டி கதை//

நல்ல வளர்ப்பு.

பிகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

சினேகிதி said...

அழகான கதை விகடகவி.