Friday, July 8, 2011

பாட்டி வடைசுட்டகதையை திரைப்படமாக எடுத்தால்!...

பாட்டி வடைசுட்டகதையை கேள்விப்படதாவர்களே இருக்க முடியாது..இந்த கi:ட சில பிரபலங்கள் திரைப்படமாக எடுக்க முன்வந்தார்கள் என்றால் எப்படியேல்லாம் அந்தக்கதையை தமதுபாணியில் மாற்றியமைத்து எடுப்பார்கள் என ஒரு ஜாலியான கற்ப்பனை..
Peter Jackson












பீட்டர் ஜாக்சன்


நாசாவில ஒரு மறைவான இடத்தில பலவருடங்களாக ரகசியமான ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த ஆய்வு திட்டத்தின் தலைமை விஞ்ஞானி
ஏஞ்சலினா ஜோலி(அதுதாங்க எங்கபாட்டி).உலகத்தையே ஒரு நிமிடத்தில் அளிக்க கூடிய அணுவாயுத்திறக்கான கண்டுபிடிப்பினை உருவாக்கி அதைபாதுகாப்பாக ஒரு வட்டவடிவான பேழையில் மறைத்து வைக்கின்றார்.இதனை எப்படியோ அறிந்த ரஷ்யமாபிய வில்லன்கள் அதைக்கொள்ளையடிப்பதற்க்க காட்டிற்க்குச்சென்று கிங்கொங்கை பிடித்து வந்து அராய்ட்ச்சி கூடத்திற்க்கு அனுப்புகின்றனர்.


இந்தக்காட்ச்சிக்காகவே அமெரிக்க நகரை அச்சுஅசலா உருவாக்கி அதை அணுகுண்டு வைத்து அழித்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அழிக்க வந்த கிங்கொங் எங்கநாயகிய பார்த்து லவ்வோ லவ்வுனு லவ்வி காதல் கவிதையேல்லாம் எழுதிற லெவலுக்கு போயிடுது.கிங்கொங் இவங்க பக்கம் சேர்ந்து கொண்டதைத் தெரிஞ்சுகெண்ட வில்லங்கள் பெரிய பெரிய டைனோசரா பிடிச்சு உலகத்தை அழிக்க அனுப்பிறாங்க..அதாவது அமெரிக்கா என்ற உலகத்தை..அப்புறமேன்ன அமெரிக்க அழியுது
அதைக்காப்பத்த ஒரு நாலஞ்சு காதாநாயகர்கள் இணைந்து சாகசப்பயணம் செய்து..ஒவ்வொருவராக மண்டையபோடுகின்றனர்..கடைசிகாதநாயகன் மட்டும் எப்படியோ தப்பி கிங்கொங்கோடு இணைந்து எல்லாடைனசோர்களையும் போட்டுத்தள்ளி உலகத்தை காப்பாற்றுகின்றார்..இதைத்தத்துருபமா எடுப்பதற்க்காக பல சாப்ட்வேரையேல்லாம் உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றார்கள்..3Dதொழில்நுட்பம் தத்துருபமாக கையாளப்பட்டிருக்கின்றது..(இனி வருவதையெல்லாம் எங்கட தொழில்நுட்பப்பதிர்கள் பக்கத்திலயிருந்து பார்த்ததை மாதிரி பக்காவா எழுதுவாங்க படிச்சுத்தெரிஞ்சுகொள்ளுங்கள்...)



தொடரும்...

சிரிப்பு வருது சிரிப்பு வருது...


பாலு:-நான் எதாவது தப்புசெய்தால் எங்கப்பாவுக்கு மூக்கு மேலே கோபம் வரும்!
முரளி:-இது என்னடா அநியாயமா இருக்கு!..
பாலு:-எதுடா அநியாயம்?
முரளி:-பின்னே நீ தப்புசெஞ்சதுக்கு உன்மேலேதானே கோபம் வரணும் மூக்கு மேலே கோபப்படறாரே!..

முரளி:-கோழியோட ஆயுள் எத்தனை நாள் தெரியுமா?
பாலு:-அட, இது கூடத்தெரியாதா!விருந்தாளிங்க வரும் வரைக்கும்!


மாஜிக் நிபுணர்:-ஹலோ, பெண்ணே, மேடைக்கு ,வா என்னை இதற்க்கு முன் உனக்குத்தெரியுமா?..
சிறுமி:தெரியாது ,அப்பா!..


டாக்டர்: நான் கொடுத்த இரும்புச்சத்து மாத்திரையை ஏன் சாப்பிடவில்லை!
பாலு:அவை டூப்ளிகேட் என்று நினைக்கிறேன்!
டாக்டர்:எப்படிச் சொல்லுகிறாய்?
பாலு:அவற்றைக் காந்தம் வைத்துப்பரிசோதித்தேன்.காந்தம் மாத்திரையைக் கவரவில்லையே!..


சிறுமி: அம்மா நான் பிறக்கிறதுக்கு முன்னாலேயே என்னைப் பார்த்திருக்கியா?
தாய்:இல்லையே!..
சிறுமி:அப்புறம் எப்படிப்பிறந்ததும் நான்தான் உன்பொண்ணுன்னு கண்டு பிடிச்சே!..

பாலு:ஒரு வருஷம் நான் நடக்க முடியாமல் இருந்தேன்!
முரளி:அப்படியா எப்போது?
பாலு:நான் குழந்தையாக இருந்தபோது!.


பாலு:பிறந்தநாள் அன்று நாம ஏன் கேக்கை வெட்டுகிறோம்?
குமார்:எதற்க்கு எல்லோரும் சாப்பிடுவதற்குதான்!
பாலு:இல்லை.நாம் ஏன் கேக்கை வெட்டுகிறோம் என்றால், எல்லோருக்கும் முழு கேக்கைக்கொடுக்க முடியாது என்றுதான்!..


முரளி: என்னடா பாலு டிக் ஷனரியைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறாய்?..
பாலு:நான் எப்போ சிரித்தாலும் அர்தத்தோடுதான் சிரிப்பேன்!..

Thursday, July 7, 2011

அதிசயம்….! ஆனால் உண்மை, பேசும் அற்புத வளர்ப்பு மீன்

உலகில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஐரோப்பியாவில் பிரான்சில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்த அதிசயம் இடம் பெற்றுள்ளது . இந்த வளர்ப்பு மீன் பற்றி இதன் பராமரிப்பாளர் பல திகைப்பூட்டும் விடயங்களை கூறுகிறார்.

இதன் பெயர் “சுச்சு“. இந்த மீன் அதிகமான நேரத்தில் வெளியில் தானிருக்குமாம். தண்ணீர் தொட்டியில் இருக்கும் நேரத்தை விட வெளியில் இருப்பதை அதிகம் விரும்புகின்றது.

ஐஸ்கிரீம், லட்டு இவைகளே இதன் பிரதான உணவு என்பதாகவும், பாடல்களுக்கு நடனமடக் கூடியதாகவும், சொல்வதைக் கேட்டு செயல்படக் கூடியதாகவும் காணப்படுகிறது.

இதன் பராமரிப்பாளர்கள் வெளியில் செல்லும் போது கூடவே செல்லப் பிராணி போல் கையில் எடுத்து செல்லுகிறார்கள்



thank:-tamilcnn.com

Ware House காதலன்..


உங்களில சிலபேருக்கு Ware Houseல் வேலைசெய்யும் அனுபவம் கிடைத்திருக்கலாம்..அது ஒரு விசித்திரமான உலகம்..மரத்திலான பலட்டுகளுடனும் பெரியசைஸ் கன்டைனர்கள் ன்விசிபிள் உடைகள் பாதுகாப்புக்காக போடும் கனத்தகாலனிகள் பார்ப்பதற்க்கு சற்று முரட்டுமனிதர்கள்போலவிருக்கும் இளகியமனம் மடைத்த நண்பர்கள்..இந்த உலகினுள் திடிரேன்று வேற்றுகிரகவாசிபோல நுழைந்த எனக்கு ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது..பின்னர் சிறிதுசிறிதாக அந்தநீரோட்டத்தில் மேதுவாக நானும் இணைந்துகொண்டேன்..ஒரு நாள் வேலைசெய்துகொண்டுடிருக்கும் போது இந்தமாதிரி ஒரு சூள்நிலையில் பலவருடம் வெளியுலகமே தெரியாமல் வேலை வீடு என்றே வாழந்த ஒருவனுக்கு திடிரென்று காதல்வந்தால் என்னசெய்வான்.?தனது காதலியை வர்ணித்து எப்படி கவிதையெழுதுவான் என வேடிக்கையாக கற்பனை பண்ணிப்பார்த்தேன்..(இது இப்ப உனக்கு ரொம்ப முக்கியமா என நீங்கள் கெட்கிறது தெரியுது..இப்படித்தான் வாழக்கையில எல்லாத்தையும் வித்தியாசமா யோசிக்கனும்..என்ன பார்த்து எல்லாரும் பழகிக்கொள்ளுங்கள்..)


வீடு விட்டால் வேலை..
வேலைவிட்டால் வீடு..
நடுவிலிருக்கும் றோடு
அறியும் எந்தன் சீரு..

உன்னைக்காணும் வரையில்
என் உலகமொரு சிறையில்..
காய்ந்தமரப்பலட்டாய் வாழ்ந்திருந்தேன்
அன்று..காதல் கொண்டபின்பு கனவில்
கூட சிலிர்ப்பு..

கன்டைனரின் நீழம் உன் கூந்தல்
அளவு வருமா..சிரிங்விராப்பைப்போல
கட்டித்தழுவ ஆவல்..
கொட்டித்தீர்த்து விடவே துடிக்குதடி நெஞ்சம்..

போர்க்கிளிப்போல் உன்னைத்தங்கிச்செல்வேன்
பெண்ணே..
கணக்குபோடும் கூட உன் நினைப்பு போகவில்லையே..
கனத்த காலனிகள் என் காலில்மட்டுமில்லை
மனதில் கூட உன்னைச் சுமந்தவனும் நானே..

காத்திருந்த காலம் காணுமடிக்கண்ணே ..
காதலனின் உள்ளம் பாவமடி பின்னே..
காதலேன்னும் கடலினுள்ளே கலந்துடுவோம் வா பெண்ணே..


Tool's in this poem

Shrink Wrap

pallets

safety shoes

forklifts


Sunday, June 5, 2011

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்..




உலகமெங்கும் 3D ஜிரமடித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் LG தனதுபங்கிற்க்கு உலகின் முதலாவது 3d Smartphone ஆன LG Optimus 3D யினை
அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்க்கனவே இந்தவருடம் வெளியாகி சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்..


இதன்மூலமாக உலகில் ஒரு புதியபுரட்ச்சியினை ஆரம்பித்துவைத்தது மட்டுமின்றி இரண்டுலென்சுகளையுடைய Dual 5MP கமராவினையும் இந்தத்தொலைபேசியினுள் வடிவமைத்துள்ளது..இதன்மூலம் நீங்கள் 3Dவீடியோக்களை சொந்தமாக தயாரித்து இணையத்தில் உலாவிடலாம்.

அத்துடன் மேம்படுத்தப்பட்ட 4.3" touchscreen வசதியுடன் கணனிகளில்
இதுவரைபயன்படுத்தப்பட்ட Dual-Core Memory யினை தன்னகத்தேகொண்டுள்ள உலகின் முதலாவது கைத்தொலைபேசி என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தவருடம் ஜீன்மாதம் வெளியாகவிருக்கும்LG Optimus 3D பலத்தஎதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது..


Sunday, May 22, 2011

புதிய லேப்டப்: கூகுள் அறிமுகம்



இணையப் பாவனையாளர்கள் மட்டுமின்றி புதிய பல்வேறு விடயங்களில் இன்று முன்னிலையில் உள்ள கூகுள் நிறுவனம் புதிதாக புதியவகையில் ஒரு லேப்டப்பை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

நன்மைகள் இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர். இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.

குறை அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் கூகுளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.

விமர்சனம் இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் கூகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்

இலட்சக் கணக்கானோரின் பொதுப் பிரச்சினையான முதுகு வலிக்கு ஜெல்! பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை


முள்ளந்தண்டில் ஏற்படும் பாதிப்புக்களால் தோன்றும் முதுகு வலிகளுக்கு எவ்வளவுதான் மருந்து குடித்தாலும், அது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிவாரணத்தை அளிக்காது. இலட்சக்கணக்கானவர்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. இவர்களுக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிதாக ஒரு ஜெல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஆயிரக்கணக்கான நுண் சேர்க்கைகளைக் கொண்டது. உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டதும், இந்த நுண் துணிக்கைகள் உடலுக்குள் ஒன்றுசேர்ந்து முள்ளந்தண்டுத் தட்டுக்களில் ஏற்பட்டுள்ள பாதுப்புக்களை சரி செய்யக்கூடியது. பிரிட்டிஷ் மக்களுள் 80 சதவீதமானவர்கள் தங்களது ஆயுள் காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் முதுகு வலியால் அவஸ்த்தைப் படுகின்றனர்.
பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை இது தாக்குகின்றது. முள்ளந்தண்டில் மிகவும் மோகமாகப் பாதிக்கப்பட்ட பகுதி மட்டுமே சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகின்றது . இவ்வாறான சத்திர சிகிச்சையின் பின் நோயாளி குணமடையவும் நீண்ட காலம் செல்லும். ஆனால் இந்தப் புதிய ஜெல் ஊசி மூலம் ஏற்றப்படுவதன் மூலம் நோயாளி ஓரிரு தினங்களில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்து விடுகின்றார். மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் பின் இந்த ஜெல் வெற்றியளித்துள்ளது. கோடிக் கணக்கான துணிக்கைகள் திரவ வடிவில் உடலுக்குள் செலுத்தப் பட்டதும் அவை உடலுக்குள் ஒன்று சேர்ந்து ஜெல்லாக மாறி உரிய பலனை அளிக்கின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

நன்றி:Tamillcnn.com