Thursday, July 7, 2011

Ware House காதலன்..


உங்களில சிலபேருக்கு Ware Houseல் வேலைசெய்யும் அனுபவம் கிடைத்திருக்கலாம்..அது ஒரு விசித்திரமான உலகம்..மரத்திலான பலட்டுகளுடனும் பெரியசைஸ் கன்டைனர்கள் ன்விசிபிள் உடைகள் பாதுகாப்புக்காக போடும் கனத்தகாலனிகள் பார்ப்பதற்க்கு சற்று முரட்டுமனிதர்கள்போலவிருக்கும் இளகியமனம் மடைத்த நண்பர்கள்..இந்த உலகினுள் திடிரேன்று வேற்றுகிரகவாசிபோல நுழைந்த எனக்கு ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது..பின்னர் சிறிதுசிறிதாக அந்தநீரோட்டத்தில் மேதுவாக நானும் இணைந்துகொண்டேன்..ஒரு நாள் வேலைசெய்துகொண்டுடிருக்கும் போது இந்தமாதிரி ஒரு சூள்நிலையில் பலவருடம் வெளியுலகமே தெரியாமல் வேலை வீடு என்றே வாழந்த ஒருவனுக்கு திடிரென்று காதல்வந்தால் என்னசெய்வான்.?தனது காதலியை வர்ணித்து எப்படி கவிதையெழுதுவான் என வேடிக்கையாக கற்பனை பண்ணிப்பார்த்தேன்..(இது இப்ப உனக்கு ரொம்ப முக்கியமா என நீங்கள் கெட்கிறது தெரியுது..இப்படித்தான் வாழக்கையில எல்லாத்தையும் வித்தியாசமா யோசிக்கனும்..என்ன பார்த்து எல்லாரும் பழகிக்கொள்ளுங்கள்..)


வீடு விட்டால் வேலை..
வேலைவிட்டால் வீடு..
நடுவிலிருக்கும் றோடு
அறியும் எந்தன் சீரு..

உன்னைக்காணும் வரையில்
என் உலகமொரு சிறையில்..
காய்ந்தமரப்பலட்டாய் வாழ்ந்திருந்தேன்
அன்று..காதல் கொண்டபின்பு கனவில்
கூட சிலிர்ப்பு..

கன்டைனரின் நீழம் உன் கூந்தல்
அளவு வருமா..சிரிங்விராப்பைப்போல
கட்டித்தழுவ ஆவல்..
கொட்டித்தீர்த்து விடவே துடிக்குதடி நெஞ்சம்..

போர்க்கிளிப்போல் உன்னைத்தங்கிச்செல்வேன்
பெண்ணே..
கணக்குபோடும் கூட உன் நினைப்பு போகவில்லையே..
கனத்த காலனிகள் என் காலில்மட்டுமில்லை
மனதில் கூட உன்னைச் சுமந்தவனும் நானே..

காத்திருந்த காலம் காணுமடிக்கண்ணே ..
காதலனின் உள்ளம் பாவமடி பின்னே..
காதலேன்னும் கடலினுள்ளே கலந்துடுவோம் வா பெண்ணே..


Tool's in this poem

Shrink Wrap

pallets

safety shoes

forklifts


No comments: