Wednesday, October 15, 2008

வித்தியாசமான பல்சுவை உணவுகள் வேண்டுமா?

எந்த நாளும் ஒரே மாதிரி உணவை உண்டு அலுத்துப்போய் விட்டீர்களா..?
வித்தியாசமாக எதையாவது சாப்பிடனும் போல இருக்கா..அப்படின்னா உடனே கிளம்புங்க சைனாவுக்கு..
சைனாவுக்கு போகமுடியாது என்று சொல்லி நாவூறிக்கொண்டு இருக்கிங்களா?..
கவலைய விடுங்க நான் உங்களை கூட்டிட்டுப்போறேன்..



சரி இதோ வந்தாச்சு அந்த உணவக அங்காடிக்கு..என்ன வாசனை மூக்கத்துளைக்குதா கொஞ்சம் மனசைக்கட்டுப்படுத்திட்டு வாங்க...



சுறா எண்ணையில் பொரிக்கப்பட்ட நட்சத்திரமீன்களை பார்த்தீர்களா?



சுறாக்குட்டி பொரியல், கடல் உணவுகள் எல்லாம் பிடிச்சு இருக்கா?..



இப்பத்தான் உங்களுக்காக படம்பிடிச்சிட்டு இருந்த பாம்பைப்பிடிச்சு தோலை உரிச்சு ரெடிபண்ணி வைச்சு இருக்காங்க..அப்படியே சாப்பிடலாம்..



இதோ நன்றி உள்ள நாயின் ஈரலை பொரித்து மரக்கறிகளோடு கலந்து வைச்சு இருக்காங்க..என்ன ஒரு ரசனை..



ஆட்டு நுரையீரலை கறியாக்கி வைச்சு இருக்காங்க..நூடில்சில போட்டு சாப்பிடலாம்..



இப்ப நொருக்குத்தீனி சாப்பிட போகலாமா?..தேள்..புழுக்கள்..பூச்சிகள்..எவ்வளவு வேணுமோ.. அள்ளி சாப்பிடலாம்..



தங்க நிறத்தில பொரிஞ்ச தேளை பார்க்க உங்கள் நாவூறுகின்றதா?..



இந்தப்பொரியல் வேணுமா?..



நாய் மூளைசூப்பு சுவைக்கின்றீர்களா?..



பச்சையாக சாப்பிட பளபளப்பான உணவுகள்...



எனி உங்களுக்கு வேண்டியத நீங்களே தேடி எடுத்துக்கொள்ளுங்கள்..





Tuesday, September 16, 2008

எந்திரன் நடனக்காட்ச்சி


சங்கர் இயக்கத்தில் ரஜனி நடிக்கும் எந்திரன் படத்தில்.ரஜனி ஒரு எந்திரமனிதானக நடிக்கவிருப்பதாக கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆங்கிலப்படங்களுக்கு நிகராக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் எடுக்கப்படுகின்றது இந்தப்படம்..
சாதாரணமாகவே தனது படங்களில்
பாடல்களுக்காக தாயாரிப்பாளரின் பணத்தில் பலகோடி செலவுசெய்யும் சங்கர்.
ரஜனியுடன் பின்னனி நடனம் ஆடுவதற்க்காக இதைப்போன்ற
பல ரோபோக்களை வாங்கிக்குவித்தாலும் ஆட்ச்சரியப்படுவதற்க்கில்லை..இதை உறுதிப்படுத்த இன்னும் சில சொற்ப்ப....... வருடங்கள் பொறுத்து இருந்தாலே போதுமானது.....

Monday, August 18, 2008

பேய் பங்களா...திகில் காட்ச்சி (ஒளிப்படம்)

ஊராரினால் பேய் வீடு என ஒதுக்கப்பட்ட இடத்திற்க்கு சில சிறுவர்கள் கிரிக்கட் விளையாட வருகின்றனர்.அப்பொழுது பந்து தற்செயலாக பாழடைந்த பங்களாவினுள் விழுந்து விடுகின்றது..அதைத் தேடிச்சென்ற சிறுவனுக்கு நடந்தது என்ன?...






திகில் குறும்படம் ஒன்றினை எடுக்கவேண்டும் என்பது எனது நீண்டநாளைய ஆசை..அதற்காக விளையாட்டாக சில காட்ச்சிகளை எடுத்து பரிச்சித்து பார்த்து இருக்கின்றேன்..இது ஒரு சோதனை முயற்ச்சியாக எடுத்தபடியினால் பல தவறுகள் இருக்கின்றன..இதனை ஒரு முன்னோடமாக எடுத்துக்கொண்டு..எனது குறும்படத்தை சுவரசியமாக எடுப்பதற்க்கான உங்கள் மேலான ஆலோசனைகளை வளங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்..

Friday, July 4, 2008

அறிமுகமாகின்றது அப்பிளின் புதிய i Phone 3G.


அப்பிள் நிறுவனத்தின் ஜபோன் மொபைல் உலகத்தில் புரட்ச்சி ஒன்றை ஏற்படுத்தியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

இப்பொழுது ஜபோன் அறிமுகமாகி ஒரு வருடபூர்த்தியை முன்னிட்டு அப்பிள் தனது ஜபோனின் அடுத்தபதிப்பான i Phone 3G யை அறிமுகப்படுத்த உள்ளது.


பழைய ஜபோனில் இருந்த குறைகள் களையப்பட்டு அதைவிட கவர்ச்சியானதோற்றத்திடனும் iphone 3G அறிமுகப்படுத்தப்படுகின்றது.
அப்பிள் இம்மாதம் 11 திகதி உலகம் முழுவதும் iphone 3G பாவனைக்கு அறிமுகப்படுத்துகின்றது.உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்காப்படும் இதன் விலை வெறும் 199 டாலார்கள் தான்.இதனால் i phone 3G விற்ப்பனையில் வரலாறு கானாத சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Wednesday, June 4, 2008

ரெடிமேட் காதல்கவிதை

நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீர்களா?..உங்கள் நண்பர்கள் தமது காதலியை மடக்க காதல் கவிதை எழுதித்தாடா மச்சான் என்று நச்சரிக்கின்றார்கள்h?இதோ உங்களுக்கு ஒரு தீர்வு... கீழே காணப்படும் ரேடிமேட் காதல் கவிதையை எழுதிக்கொடுங்கள்..தலை தெறிக்க ஓடி விடுவார்கள்..(மாறக உங்கள் காதலியிடமோ அல்லது மனைவியிடமோ காட்டி தர்மஅடி வாங்கினா அதுக்கு நான் பொறுப்பு அல்ல...)


வர்ணனை

உன் கண்ணிருக்கிறதே கண்ணு அது காய்ஞ்சு போன பன்னு....

உன் மூக்கிருக்கிதே மூக்கு அது திறந்துபோட்ட போக்கு...

உன் வாயிருக்கிதே வாயி அது கிழிஞ்சுபோன பாயி...

உன் நாக்கிருக்கிதே நாக்கு அது நாறிப்போன சாக்கு..

உன் முடியிருக்கிதே முடி அது அவிழ்க்க முடியாத நொடி....

உன் காதிருக்கிதே காது அது வீணாப்போன கோது...

உன் பல்லிருக்கிதே பல்லு அது பறங்கி மலைக்கல்லு...

உன் காலிருக்கிதே காலு அது குதிரையோட வாலு...

உன் குணம்மிருக்கிதே குணம் அதிலேதான் பறிபோனது என் மனம்...

Friday, May 30, 2008

வேற்றுக்கிரகவாசிகள் என்பது யார்?

நீங்கள் வேற்றுக்கிரகளைப்பற்றியும் அவர்களது பூலோக வருகையினைப்பற்றியும் , பத்திரிகையிலும் , படங்களிலும் , கதைகளிலும், தொலைக்காட்ச்சியிலும் , பார்த்தும் , கேட்டும் , படித்தும் அறிந்திருப்பீர்கள்.வேற்றுக்கிரகவாசியானவர்கள் எம்மை விடதொழில்நுட்பத்தில் உயர்ந்தவர்கள் எனவும் அவர்களது பறக்கும்தட்டு மிகவும் நுட்பமான முறையிலும் அமைந்திருக்கின்றது எனவும் அறிந்திருப்பீர்கள்.




அவர்களது பறக்கும் தட்டு சிறிய ஓடமாகவே இருப்பதால்.அவர்கள் அண்டவெளியில் ஆகத்தொலைவில் இருந்து வந்திருக்கமுடியாது.
ஏனெனில் அந்தச்சிறிய ஓடத்தினால் பலகோடி பில்லியன் தூரத்தினை
கடந்து வருவதற்க்குரியஎரிபொருளையோ ,உணவுக்களஞ்சியப்படுத்தலையோ
கொண்டிருக்கமுடியாது.இதுவரையில் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் எந்த உயிரினமும் வாழவதற்க்கான சாத்தியக்கூறு காணப்படவில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.


ஆகையால் அந்த உயிரினம் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்ததென்பது நியாயப்படுத்த முடியாத வாதமாகிவிட்டது.எனவே எனது கருத்தென்னவெனில் அவர்கள் வேற்றுக்கிரகவாசிகளல்ல இந்தப்பூலோகத்தைச் சேர்ந்தவங்களே ஆகும்.ஆனால் அவர்கள் இப்போது இந்த உலகத்தில்வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இல்லை... கிட்டதட்ட 3000 அல்லது 4000 ஆண்டுகள் பிற்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் ஆகும்.



இதனைப்பற்றி விரிவாகப்பார்ப்போமாயின் அங்கிகளின் கூர்ப்புக்கொள்கை (Theory of oragaic Evaloution)யினைப்பற்றி நீங்களஅறிந்திருக்கலாம்.
இங்கிலாந்தைச்சேர்ந்த இயற்க்கை விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வின்(1809-1882) அவர்கள் இந்த கொள்கையினை உருவாக்கினார்.ஒரு விலங்கு தனது சூழலுக்கு தகுந்தபடி காலப்போக்கில் தன்னை இயைபாக்கம் அடையச்செய்கின்றது என்பதாகும்.மனிதனுக்கு இந்த பாலமான கைகளும், கால்களும் வாய்த்திருப்பதற்க்கு காரணம் அவன் கடினமாக உழைத்து வேலை செய்யவேண்டியிருப்பதினாலும் அவனது தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ளுவதற்க்காகவும் ஆகும்.


ஆனால் இப்பொழுது மனிதன் நவீன உபகரணங்களையும் , பலவிதமான தொழில்நுட்பத்தினையும் கண்டுபிடித்திருப்பதால் அவனுக்கு கடினமான வேலை செய்ய வேண்டிய செய்யவேண்டிய அவசியமில்லாமல் போகின்றது.மூளை மட்டும் மிகமுக்கியமானதாகவும் , இப்போது காணப்படும் வழுவான கை, கால்கள்க்கொண்ட உடல் தேவையற்றதாக மாறிவிடும். இதனால் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் போது மனிதனது உடல் தேவையற்றதாக மாறிவிடும்..


இதனால் பல்லாயிம் ஆண்டுகள் செல்லும்போது மனிதனது உடல் இதற்கான இயல்பாக்கத்தை அடைந்து மெல்லிய கை, கால்ளைக்கொண்ட குறுகிய உடலாகவும் தலை மட்டும் அசாதாரணமாக வளாந்து பெருத்துக்காணப்படும். என ஒரு பிரபலமான விஞ்ஞானி அறிக்கை விட்டுள்ளார்.அவர்குறிப்பட்ட அந்தத் தோற்றம் இன்றைய மக்கள் கண்டதாகக்கூறப்படுகின்ற வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.





இதன் மூலம் வேற்றுக்கிரகவாசியெனக்கூறப்படுபவர்கள்.இந்தப் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் தான் ஆனால் இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல... பல்லாயிரம் ஆண்டுகள் பிற்பகுதியில் வாழந்துகொண்டிருக்கும் மனிதர்கள் தான் என்பதை ஓரளவு ஊகிக்கலாம்.


அவர்களால் எப்படி இந்தக்காலத்திற்க்கு வரமுடியும் என நீங்கள் யோசிக்கலாம்.இன்றைய நூற்றாண்டிலேயே மனிதன் இவ்வளவு சாதனைகளைப்புரிந்துவிஞ்ஞாத்திலே கரைகண்டு பால்வீதியினையே தனது கண்பார்வைக்குள் வைத்திருக்கிறான் என்றால் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்திருக்கும் போது எத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருப்பான்.இந்தப் பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கத்தொடங்கியிருப்பான். தொழில்நுட்பம் , விஞ்ஞானம் ஆகிய இரண்டினதும் எல்லையினைத்தொட்டிருப்பான்.

எமது பிரபஞ்சத்தில் (black holes) கருந்துளை அல்லது கருமைத்துவாரங்கள் என அழைக்கப்படும் இறந்த நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றின் அருகே செல்பவர்களுக்கு நேரம் மெதுவாகவே நகரும். ஆனால் இங்கே பூமியில் இருப்பவர்களுக்கோ நேரம் வழமை மாதிரியே ஓடும்.இந்த நேர இடைவெளி பூமியிலே பல வருடங்களுக்கு சமமானதாகும்..


இந்த கருந்துளைகள் எப்படி உருவாகின்றது என்றால் நட்சத்திரங்கள் பலமில்லியன் வருடகாலத்துக்கு வாழ்கின்றன இறுதியில் அவற்றுக்கும் அழிவுகாலம் வருகின்றது.தனது அணுசக்தி முழுவதும் முடிவடைந்ததும் ஈர்ப்புச்சக்திக்கு ஈடுகொடுக்கமுடியாது நட்சத்திரமானது சுருங்கத்தொடங்குகின்றது.இவ்வாறு இன்னமும் அதிகமாக சுருங்கி மாபெரும் அடர்த்தியுடன்கூடிய ஒரு புள்ளிப்பொருளாகலாம்.இதுவே கருமைத்துவாரமாகும்.


இன்றே பால்வீதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதன் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்திருக்கும் சமயத்தில் கருமைத்துவாரத்தை கைப்பற்றி அதன் நேர மாற்ற கோட்பாட்டினை ஆராய்ந்து நேரத்தை வெல்லும் கலையை அறிந்து விஞ்ஞான கற்பனை கதையில் வந்ததை போன்ற ஒரு டைம் மெசினை(time machin)தாயரிக்கலாம்.




இதன் முலம் மனிதனால் நேரத்தை தனது ஆட்சிக்குட்பட்டதாக மாற்றமுடியும்.நேரத்தை வெல்லுவதன் முலம் கடந்த காலத்திற்க்கு சென்று வருவதற்க்கான கலையை கண்டுபிடித்திருக்கலாம்.இப்படி கடந்த காலத்தில் இருந்து வந்தவர்களை கண்ட பூலோகமக்கள் அவர்களின் பிரமிக்கவைக்கும் தொழில்நுட்பவளர்ச்சியைக்கண்டு அஞ்சி தங்களை விட உயர்ந்த தொழில்நுட்பத்தினை கொண்ட இவர்கள் வேறு கிரகமொன்றில் இருந்து வந்விருக்கவேண்டும் என முடிவெடுத்திருக்கின்றார்கள்.

வேற்றுக்கிரகவாசிகளாக இருந்திருந்தால் அவர்கள் மேலோட்டமாக பூமியில் ஆராய்ச்சி செய்யாமல் நேரடியாக தரையிறங்கி பூமியிலுள்ளவர்களுடன்தொடர்பு கொண்டிருப்பர்கள்.


ஆனால் இந்த மனிதர்களோ தமது சிக்கலான தொழில்நுட்பத்தினை இன்றையமக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதனாலும் அப்படியே அறிந்துகொண்டால் அவர்களது இயல்புவாழ்க்கை மாறிப்போய் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற பயத்தினாலுமே இந்த பூமியில் சட்டபூர்வமாக தரையிறங்காமலும் ,தடயங்களையும் , சாட்ச்சிகளை மறைத்தும் சாதுர்ரியமாக வந்து செல்லுகின்றார்கள் என்பதை ஊகிக்கமுடிகின்றது.எனவே இந்த கருத்து அலட்ச்சியப்படுத்தப்படவேண்டியதல்ல ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவேண்டியது என நிச்சயமாகக்கூறாலாம்.

Sunday, May 25, 2008

குமரக்குறும்பு (கலக்கலான கற்பனை)


சிறுவயது முதல் முருகன் மீது எனக்கு பக்தி அதிகம்.

அவனை என்னிடமிருந்து பெரியவனாக்கிப்பாராமல் என் நண்பனாகவும் விளையாட்டுத்தோழனாகவுமே கருதியிருந்தேன்.
கையிலே கந்தசஷ்டி கவசம்..அயர்வாக இருந்ததனால் சிறிதே கண்ணயர்ந்தேன்.
என்னை ஏதோ ஊடுருவதைப்போன்ற உணர்வு திடுக்கிட்டு கண்விழித்தேன். எங்கும் புகைமூட்டம்.அடுப்பிலை எதாவது மறந்து வைத்துவிட்டேனோ என சமயலறையை நோக்கி செல்கையில்

'பக்தா..இங்கே வா..' என்று ஒரு குரல் என்னை அழைத்தது..

புகைமூட்டத்துக்கு மத்தியிலே இராஜஉடை அணிந்து கையிலே வேலுடன் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.

அவனருகில் சென்ற நான்'அண்ணே நாடகத்திலிருந்து வேசத்தை கலைக்காமலே ஓடிவந்து விட்டீர்களா? இது நாடகக்கம்பனிஇல்லை எனது வீடு' எனக்கூறினோன்.

அவசரப்படாதே பக்தா நான் தான் பரமசிவனின் மைந்தன் முருகன்.என்றான் அவன்.

' ஹா ஹா ஹா.. இதை நம்ப நான் என்ன கேனப்பயலா..
எத்தன பக்திப்படங்களை பார்த்திருக்கிறம். அதில எல்லாம் கடவுள் வந்தவுடன் அட்டகாசமாய் கெஞ்சநேரம் சத்தம் போட்டு சிரிப்பாங்க...
நீ என்னடா என்றால் சத்தமில்லாம தீடீரென்று வந்து நிக்கிற உன்னை எப்படி நம்பிறது.. 'பக்தா உன் நம்பிக்கையை வரவலைக்க நான் என்னதான் செய்ய வேண்டும்' என அமைதியாக கேட்டான்.

முருகா..முருகா... பெரிசா ஓன்றும் கேட்கலை. நீ கெஞ்சம் கிராப்பிக்ஸ் செய்துகாட்டு அது போதும்..'
'
கிராப்பிக்ஸா?..'

ஆமா!... பக்திப்படங்களிலேல்லாம் கடவுள் கிராப்பிக்ஸ் செய்வாங்க..பத்து தலை இருபது கை ஏழேட்டப்பிரிஞ்சுடான்ஸ் எல்லாம் ஆடுவாங்க..புதுசு புதுசா மஜிக் எல்லாம் செஞ்சுகாட்டுவாங்க....நீயும் அப்படி செஞ்சுகாட்டினா தான்உன்னை நம்புவேன்..

'பக்தா...நான் இன்றைக்கு அதுக்கு எல்லாம் லீவு விட்டுவிட்டுதான் உன்னைப்பார்த்து ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன்.வீணாக தொந்தரவு பண்ணாத..வேணுமின்னா இன்னொரு நாளைக்கு தேவதூதனிடம் CDஜ கொடுத்து அனுப்புகின்றேன் போட்டுப்பார்...'என்றான்.

'அது சரி முருகா நீ ஏன் இப்படி மெலிஞ்சு போயிருக்கின்றாய்..வள்ளி , தெய்வானை இருவரும் உன்னைக் கவனிப்பதில்லையா?..'

'அதை ஏன்பா கேட்கிறா.இரண்டு பேரும் எப்பபர்த்தாலும்.TV சீரியல் பார்த்திட்டு அழுதுகிட்டிருக்காங்க..சாப்பாடு கூட ஒழங்காககிடைக்கிறதில்லை..'

ஏன் முருகா உனக்குத்தான் கோயில்ல விதவிதமா நைவேத்தியம் படைக்கிறார்களே.அதை சாப்பிடுவதில்லையா?..'

'அடப்பாவி எத்தனை நாளைக்குக்தான் பொங்கலையும் ,வடையும் , புளிச்சாதத்தையும் சாப்பிடுறது.சலிச்சுப்போச்சு. நீங்க மட்டும் டிசைனாக சாப்பிடுறிங்க.என்னாங்கடா இது நியாயம்..'

'முருகா எங்கே உன் மயில்வாகனம் ஏன் அதில் ஏறிவந்து எனக்கு காட்சி தரவில்லை!..'

'ஏதோ சின்ன வயசில ஆசைக்கு மயிலில ஏறி போஸ் கொடுத்தா அதையோ வாகன மாக்கிறாதா..நீயே சொல்லு இப்ப நான் மயில்மேலஏறினா அது செத்துப்போகாதா..?' இப்ப என்னோட வாகனம் வேற்றுக்கிரகவாசிகளின் வாகனம் என்று சொல்லுகிறீர்களோ அதுதான்..அதுலதான் நான் இப்பூலோகத்தை ரவுன்ட் அடிக்கிறனான்.'

'முருகா.உன் அண்ணன் கணேஷன் எப்படி இருக்கிறார்?..'

அதை ஏன்பா கேட்கிறா.அவருக்கு ஏற்கனவே பருத்த உடம்பு இவங்கவேற கொழுக்கட்டை , மோதகம் போல இனிப்பு அயிட்டங்களைகொடுத்து கொடுத்து அவருக்கு சுகர் பிராபளம் வந்திருச்சு...பாவம் எலியையும் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரியும் கையுமா அலைஞ்சிட்டிருக்காரு..'

'முருகா.. உனது தந்தையும் தாயும் எப்படி இருக்கிறார்கள்?...'

அவங்களுக்கென்ன திருவிளையாடல் படத்தைப் போட்டுப்பார்த்து பழைய நினைவுகளை மீட்டுக்கிட்டிருக்கிறாங்க..

'நடராஜார் ஆனந்த தாண்டவம் ஆடுவதில்லையா?...'
சொல்ல மறந்திட்டேன் அவர் இப்ப தேவலோகத்தில் டான்ஸ் கிளாஸ் நடத்திட்டு இருக்காரு..சரஸ்வதி டீயூசன் நடத்திறா..லட்சுமி தான்கல்லாப்பெட்டியை பார்த்துக்கிறா..

'முருகா.... உனக்கு ஏன் பிள்ளை பிறக்கவில்லை?..'

'ஓ... அதுவா.. ஏற்க்கனவே தேவலோத்தில் சனத்தொகை கூடிவிட்டது விட்டால் கடவுள்கள் மனிதர்களை விட கூடுதலாகி விடுவார்கள்..அதனால்தான் நான் குடும்பக்கட்டுபாட்டு முறையை பயன்படுத்துகின்றேன்...'

'ஆமா!.. முருகா ஏன் இந்த வேலினை கையிலே வைச்சிட்டுருக்கிறிங்க..'
'இதை என்னவென்று நினைத்தாய் 24கரட் கோல்ட் இப்ப திருட்டுப்பசங்க அதிகமாயிட்டங்க..அதனால்தான் கவனமாக கையிலயேவைச்சிட்டுருக்கேன்...எப்படி?... என் அறிவு...'

'ஏன் முருகா நீ நாகரிகமான நவீன உடைகளை அணிவதில்iலை?..'

'அடப்பாவி!.. அதை ஒருக்கா கேட்கப்போய்தான் என்ன கோமணத்தோட பழனியில நிக்க வைச்சிடாங்க.. இருக்கிறதே போதும்டா சாமி..!'

திடிரென்று தொலைபேசி மணி அலரும் சத்தம் கேட்டது..எங்கே என்று நான் தேடிப்பார்க்கும் முன்பு... முருகன் தனது கைத்தொலைபேசியைஎடுத்து காதில்வைத்து ஏதோ பேசினார்..

'பக்தா.. நேரமாகிவிட்டது. கைலாயத்தில் ஒரு அர்ஜன்ட் மீட்டிங் இருக்கிறது..போய் வருகிறேன்..Bye Bye எனக்கூறி மாயமாக மறைந்தார்..திடுக்கிட்டு எழுந்தேன் கந்தஷடிக் கவசம் என் கைகளில் தவழ்ந்தது..