Sunday, June 5, 2011

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்..




உலகமெங்கும் 3D ஜிரமடித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் LG தனதுபங்கிற்க்கு உலகின் முதலாவது 3d Smartphone ஆன LG Optimus 3D யினை
அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்க்கனவே இந்தவருடம் வெளியாகி சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்..


இதன்மூலமாக உலகில் ஒரு புதியபுரட்ச்சியினை ஆரம்பித்துவைத்தது மட்டுமின்றி இரண்டுலென்சுகளையுடைய Dual 5MP கமராவினையும் இந்தத்தொலைபேசியினுள் வடிவமைத்துள்ளது..இதன்மூலம் நீங்கள் 3Dவீடியோக்களை சொந்தமாக தயாரித்து இணையத்தில் உலாவிடலாம்.

அத்துடன் மேம்படுத்தப்பட்ட 4.3" touchscreen வசதியுடன் கணனிகளில்
இதுவரைபயன்படுத்தப்பட்ட Dual-Core Memory யினை தன்னகத்தேகொண்டுள்ள உலகின் முதலாவது கைத்தொலைபேசி என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தவருடம் ஜீன்மாதம் வெளியாகவிருக்கும்LG Optimus 3D பலத்தஎதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது..


Sunday, May 22, 2011

புதிய லேப்டப்: கூகுள் அறிமுகம்



இணையப் பாவனையாளர்கள் மட்டுமின்றி புதிய பல்வேறு விடயங்களில் இன்று முன்னிலையில் உள்ள கூகுள் நிறுவனம் புதிதாக புதியவகையில் ஒரு லேப்டப்பை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

நன்மைகள் இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர். இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.

குறை அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் கூகுளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.

விமர்சனம் இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் கூகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்

இலட்சக் கணக்கானோரின் பொதுப் பிரச்சினையான முதுகு வலிக்கு ஜெல்! பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை


முள்ளந்தண்டில் ஏற்படும் பாதிப்புக்களால் தோன்றும் முதுகு வலிகளுக்கு எவ்வளவுதான் மருந்து குடித்தாலும், அது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிவாரணத்தை அளிக்காது. இலட்சக்கணக்கானவர்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. இவர்களுக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிதாக ஒரு ஜெல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஆயிரக்கணக்கான நுண் சேர்க்கைகளைக் கொண்டது. உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டதும், இந்த நுண் துணிக்கைகள் உடலுக்குள் ஒன்றுசேர்ந்து முள்ளந்தண்டுத் தட்டுக்களில் ஏற்பட்டுள்ள பாதுப்புக்களை சரி செய்யக்கூடியது. பிரிட்டிஷ் மக்களுள் 80 சதவீதமானவர்கள் தங்களது ஆயுள் காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் முதுகு வலியால் அவஸ்த்தைப் படுகின்றனர்.
பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை இது தாக்குகின்றது. முள்ளந்தண்டில் மிகவும் மோகமாகப் பாதிக்கப்பட்ட பகுதி மட்டுமே சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகின்றது . இவ்வாறான சத்திர சிகிச்சையின் பின் நோயாளி குணமடையவும் நீண்ட காலம் செல்லும். ஆனால் இந்தப் புதிய ஜெல் ஊசி மூலம் ஏற்றப்படுவதன் மூலம் நோயாளி ஓரிரு தினங்களில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்து விடுகின்றார். மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் பின் இந்த ஜெல் வெற்றியளித்துள்ளது. கோடிக் கணக்கான துணிக்கைகள் திரவ வடிவில் உடலுக்குள் செலுத்தப் பட்டதும் அவை உடலுக்குள் ஒன்று சேர்ந்து ஜெல்லாக மாறி உரிய பலனை அளிக்கின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

நன்றி:Tamillcnn.com


Thursday, December 31, 2009

அன்பென்னும் இராஜாங்கம் அமைந்திடச் செய்வோம்‏


இந்த உலகம் விசித்திரமானது. இதில் உள்ள மக்கள் ஆச்சர்யமான இயல்பு உடையவர்கள். தாங்கள் வளர வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் உடையவர்களால் தான் உலகம் முன்னேறுகிறது. புதிய புதிய மாற்றங்களை உலகம் பெறுகிறது. ஆனால் இந்த நேர்மறையான எண்ணத்தோடு உலகம் நிறைவு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தான் வாழ வேண்டும். வளர வேண்டும் என்பதோடு நில்லாமல் பிறர் அழிய வேண்டும் என்கிற குரூரமான எண்ணமும் எதிர்மறையான மனோபாவமும் இங்கிருப்பதுதான் உலகத்தின் சகல சிக்கல்களுக்கும் காரணம். பல குடும்பங்கள் முன்னேறாமல் போனதற்கு இந்தக் குணம்தான் காரணம். "நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மணிக்கணக்காகக் கடவுளிடம் வரம் கேட்கும் சிலர் "நீ விளங்கமாட்டே.. நல்ல இருக்க மாட்டே.." என்று நெருங்கிய உறவுகளைக்கூடக் கோபத்தில் சாபம் வழங்கி ஏசுகிறார்கள். எல்லோரும் வளர்ந்தால் உலகம் வளரும். ஒருவர் வளர்ந்து மற்றவர் கீழே போனால் அது முழு வளர்ச்சியாகுமா? அடுத்து என்ன நடக்கும்? கீழே போனவர் சும்மா இருப்பாரா? அவர் நாலு கோவிலுக்குப் போய் வேண்டுவார்.. என்ன வேண்டுவார்? "என் எதிரி இன்று நல்லா இருக்கிறானே! அவன் வாழலாமா! அவன் வளரலாமா! கடவுளே உனக்கு கண் இல்லையா? அந்தப் பயல் தெருவில் நிற்க வேண்டமா! அவன் கஷ்டப்படுகிற காட்சியை என் கண்ணால் நான் பார்க்க வேண்டாமா?" என்று வேண்டுவார்.

அவரது சாபம் இவரை வீழ்த்தும். இவரது சாபம் அவரை வீழ்த்தும். மொத்தத்தில் இருவரும் ஆரம்பித்த இடத்திலையே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் வளர விடாமல் செய்வதால் இருவருமே வளர முடியாது. ஒருவரை ஒருவர் ஓடவிடாமல் தடுப்பதால் இருவருமே ஓட முடியாது. இருவருமே புறப்பட்ட இடத்தில் இருக்க வேண்டியதுதான்.! இந்த உண்மையை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை.!

"நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மட்டுமே வேண்டுவது சுயநலம் என்றாலும் அதில் பெரிய குற்றம் இல்லை. ஆனால் உத்தம மனம் உடையவர்கள் "ஸர்வ லோகோ சுகினோ பவந்து" என்றுதான் வேண்டுவார்கள். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று வேண்டுகிற தாயுமானவர் தமிழே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

பலவிதமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு வாழ்வியல் முறைகள் உடையதே உலகம். உலகில் வாழ்பவர் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், பகைக்காமல், பிறரையும் பிறரது நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பழிக்காமல் புரிந்து கொள்ள கொஞ்சம் அக்கறையும் முயற்சியும் வேண்டும்.

மானிட பண்பாளர்களுக்குரிய தகுதியை நம்மில் வளர்த்துக் கொள்வோம், எமது கண்ணில் பிறருக்காக அழுவோம். பிரச்சனைகளாகவல்ல, தீர்வின் அங்கமாக நாம் இருப்போம். பிறக்கவிருக்கும் புதிய ஆண்டோடு சேர்த்து நம்மையும் புதிதாக பிறப்பித்துக்கொள்வோம். மாற்றம் ஒன்றே மானிட தத்துவம். மாற்றம் என்ற சொல்லைத் தவிர உலகில் அனைத்தும் மாறிவிட வேண்டும். எமது பண்புநலன் உட்பட. பண்பாளர்களுக்குரிய குணநலனைக் கொண்டு நம்மை பரிசோதித்து சீர்படுத்திக் கொள்வோம்.


01.பண்பாளர்கள் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் சிந்திக்கிறார்கள். தைரியத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்கிறார்கள். விருப்பத்துடனும் பெருந்தன்மையுடனும் கொடுக்கிறார்கள். அன்புடனும் பெரிய மனதுடனும் மன்னிக்கிறார்கள்.

02.தனிச்சிறப்புரிமைகளைவிட கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு; பாதுகாப்பைவிட சுதந்திரம் மதிப்பு மிக்கது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

03.கல்விக்கு கரையேதும் இல்லை: வாழ்க்கை என்பது முடிவே இல்லாத வளர்ச்சி இயக்கம் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

04.அழகின் சாரம் எளிமைதான் என்பதையும், நேர்மை தான் பண்புநலனின் அஸ்திவாரம் என்பதையும் புரிந்து வைத்திருக்கறார்கள்.

05. அளவற்ற செல்வத்தைவிட மகத்தான கருத்துக்கள்தான் நிரந்தரமானவை: அலங்காரச் சொற்களை விட நிதர்சனமாக எடுத்துக்காட்டுகள் கற்றுத்தருவது அதிகம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.

06. கற்றுக் கொள்ளுதல் என்னும் மெழுகுவர்த்தியில் ஆர்வம் என்பது திரியைப் போன்றது, வியப்பு என்பது சாகசங்கள் மற்றும் சாதனைகளை ஒளியேற்றுகிற நெருப்புப்பொறி என்பதை அறிந்திருக்கிறார்கள்.

07. தமது உள்ளங்களில் நன்றியுணர்வை நிரப்பி வைத்திருக்கறார்கள்: தம்மைப் படைத்தவனுக்கும் சக மனிதர்களுக்கும் தமது நன்றியை வெளிப்படுத்துவதில் புதிய வழிகளைக் கற்று கொண்டிருக்கிறார்கள்.

08. புதிய சவால்களை, வெவ்வேறு பண்பாடுகளை, பழக்கமில்லாத வழக்கங்களை, எதிர்மறையான கருத்துக்களை வரவேற்கிறார்கள், மதிக்கிறார்கள், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

09.அறிவுத்தாகம், உண்மையின் தேடல், ஞானத்தை அடைதல் இவற்றை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

10. தமது எல்லைகள் என்ன என்பதை அறிவார்கள், ஆயினும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தமது தனிச்சிறப்பை அறிந்திருந்தாலும் மனித குலத்துடன் ஒன்றிவாழ்வதை மதிக்கிறார்கள்.

இவை எம்மை பரிசோதிப்பதற்கான அளவு கோல். முதலில் மாற்றத்தை நம்மில் காண்போம். மானிடம் சீர்பட இலட்சிய வடம் இழுப்போம், அனைவரின் மனதிலும் இடம் பிடிப்போம், புதிய பாதையில் தடம் பதிப்போம். உடலைப் பலப்படுத்தி, மனதை செப்பமிட்டு குழந்தை மனதுடனும் நிறைந்த பண்புடனும் சிகரம் நோக்கி சிங்க நடை போடுவோம். உலகினில் எல்லோரும் உறவென்று சொல்வோம்; அன்பென்னும் இராஜாங்கம் அமைந்திடச் செய்வோம்.

போன காலங்கள் போகட்டும்: இனி புதிய வரலாறு படைப்போம்...!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

மகிழ்வுடன்: சுகிதரன்

Saturday, December 19, 2009

தர்சனின் காதல்கவிதைகள்..


பல்லாண்டுகளுக்கு முன்னர் U.P தர்சன் எனும் பதிவர் பதிவெழுதிவந்ததாக அவரது பழையபதிவுகளை பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள்...அவர் பதிவுலகில் பெண்கள் குறைவாக இருக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக பதிவுலகைவிட்டு விலகி பலகாலமாக வனவாசம் Sorry வீட்டுவாசம் இருக்கின்றார்..ஆடியகால்களும் எழுதியகைகளும் சும்மாயிருக்குமா?..அவரது இன்றைய பொழுது போக்கு என்ன தெரியுமா?..பல பெண்களை இவர்பின்னால் சுற்றவைப்பதுதான்..கூடிய சீக்கிரம் அவங்களெல்லாம் சேர்ந்து இவருக்கு ஜேர்மனியில் ரசிகர்மன்றம் அமைத்தாலும் ஆட்சரியப்படுவதற்க்கில்லை..

ஒரு நாள் இதைப்பொறுக்காத நான் அவரிடம் கேட்டேன்..எப்படி மச்சான் எங்களையெல்லாம்.ஒருத்திகூட திரும்பிப்பார்க்கிறாள் இல்லை உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் செய்யமுடியுது என்று...அதற்க்கு அவன் சொன்னான்..மச்சி அதுக்கெல்லாம் ஒரு தோற்றம் வேணும்டா..இப்ப என்னப என்னப்பாரு மாதவன்ட தம்பிமாதிரி இருக்கனில்லை..சரி அந்த கருமம் தான் உன்னட இல்லையே... சரி என்னுமொரு ஜடியா சொல்லித்தாறன்...என்று சொல்லி ஒரு டயரிய என்னிடம் தந்தார்..அதில இருக்ககவிதைகள் எல்லாம் அவனாக எழுதினதோ இல்லைன்னா எங்கையாவது பார்த்தெழுதினதோ தெரியவில்லை..

ஆனால் அவன் எனக்கும் அதைத்தரும்போது சொன்னான்...டேய் பிகர மடக்கனும் என்னா முக்கியமாக உனக்கு பேச்சுத்திறமையிருக்கனும்..அடிக்கடி ஜஸ்வைக்கத்தெரியனும்..அப்படியே இந்தகவிதைகளையெல்லாம் பாடமாக்கி வைத்துக்கொள்..அவங்களோட கதைக்கும் போது இடைக்கிடையில நீயா யோசிக்கிற மாதிரி பாவ்லா காட்டிட்டு ஒவ்வொரு கவிதையா எடுத்து விடு..அப்புறம் பாரு என்று சொன்னார்..நாங்களெல்லாம் ஒரு பொண்ணுகூட கதைக்கிறதே பெரியவிடயம் அதில எங்க கவிதை சொல்லிறது..உங்களுக்கு உபயோகப்படுமா என்று பாருங்கள்..


உன்னுடைய உதடுகள் உச்சரிக்கும் வரை நான் உணர்ந்ததில்லை என்னுடைய பெயர் இத்தனை அழகாய் இருக்கிறது என்று!!


என்னடி இது நியாயம்??? என் இதயத்தை திருடியவள் நீ தனிமை சிறையில் தண்டனை பெறுவது நானா???


என் மனம் உன்னிடம் உள்ளபோதும் ஏன் என் மனம் உனக்கு புரியவில்லை..


நினைக்கவில்லை... உன்னை நினைக்கவில்லை... மறந்தால்தானே உன்னை நினைப்பதற்க்கு!..

இதுக்குமேல அதில இருக்கதெல்லம் அவர் கஸ்டப்பட்டு கண்டுபிடித்த தொழில்முறை ரகசியங்கள்..அதைவெளியே சொல்லவது சரியில்லை..எனினனும் எல்லோருக்கும் தொரிந்த இலகுவான இரண்டு ஜடியாவை எழுதுகின்றேன்... அது ஒன்னுமில்லைங்க சினிமா டயலாக்குகளை அப்படியே உல்டா பண்ணிறது தான்..இது பெண்களுக்கு பிடிக்குமாம்..உதாரணத்திற்க்கு ...மாலினி நீ ரொம்ப அழகு....அல்லது நான் உன்னை காதலிக்கிறன் என்று நினைக்கல ஆனா இதெல்லாம் நடந்திடுமோ என்று பயமாயிருக்கு அப்படியிப்படின்னு அடிச்சுவிடுங்க..அப்புறம் பாடல்களையும் சுடவேண்டியது தான்.... வெயிலில் நீ நடக்கையலில் எனக்கு வேர்வைவரும் மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்.. உடல்கல்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று..........................(உங்கள் காதலியின் பேயரினை ரெண்டு தரம் எழுதவும்..) இதைவிட மேலதிக தகவல்களுக்கு எனது காதல்குரு தர்சனிடம் வினவுங்கள்...

Wednesday, December 16, 2009

A Moment To Remember (2004 )மறக்கமுடியாத காதல்




திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுகின்ற அளவுக்கு எனக்கு அதைப்பற்றிய போதிய அறிவு இல்லைங்கன்னா..ஆனாலும் நான் மிகவும் ரசித்துபார்த்த படங்களைப்பற்றி உங்களோடசில விடயங்களைப்பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்..

இன்று பார்க்க இருப்பது A Moment To Remember எனும் கொரியன் திரைப்படமாகும்.ஏற்கனவே நீங்கள் உலகத்திரைப்படங்களை பார்ப்பவர்களாக இருந்தால் இதனை நிச்சயம் பார்த்திருப்பீர்கள் எனநினைக்கின்றேன்.காதலில் தோல்வியுற்று விரக்தியடைந்த நிலையில் இருக்கும் பெண்ணிற்க்கும்
வாழ்க்கையில் இன்பத்தையே காணமல் துன்பத்தையே அனுபவித்து முரட்டுதனமாக வாழும் ஒரு இளைஞனும் எதிர்பாரதசந்தர்பந்தில் சந்திக்கின்றார்கள்..

மோதலுடன் தொடங்கும் சந்திப்புக்கள் மெதுவாக காதலாக உருமாருறுகின்றது..காதல்காட்ச்சிகளை பார்த்துகொண்டே இருக்கலாம்..மிக அன்றுபுதமாக படமாக்கியிருக்கின்றார்கள்..இவர்களின் காதல் அந்த இளைஞனைப் பொறுப்புள்ளவனாக்குகிறது..அவளுக்காக தனது தகுதியை முன்னேற்றதொடங்குகின்றான்.நல்ல வேலையிலும் சேர்ந்து காதலியையும் கைப்பிடிக்கின்றான்..இப்படிஒரு இன்பமயமாக சென்றுகொண்டிருக்கும் காதல்தம்பதிகளின் வாழ்க்கையில் அணுகுண்டாக வந்து விழுகின்றது ஒரு செய்தி...


அந்தப்பெண்ணுக்கு அடிக்கடி ஞாபகமறதிப் பிரட்சனை வந்ததால்..பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போகின்றாள்..அங்கு அவளைப்பரிசோதித்த மருத்துவர்..அவள் Alzheimer's disease எனும் அரியவகையான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்..அவளது மூளை சிறிது சிறிதாக இறந்து கொண்டிருப்பதாகவும்..அதன் முதல்கட்டமா அவள் சிறிது சிறிதாக தனது ஞாபகசக்தியை இழந்து தன்னனையே யார் என்று அறியமுடியாத நிலைமைக்கு ஆளாகிவிடுவார் என்றும் கூறுகின்றார்..

அந்த அதிர்ச்சியை தாங்கமுடியாத தாங்கமுடியாத அவள் தனது காதல்கணவன் இதனை எப்படித்தாங்குவான் என நினைத்து அவனிடம் இந்தவிடயத்தினை மறைக்கின்றாள்..தான் தனது ஞாபகங்களை முற்றுமுளுதாக மறந்துவிடமுன்னர்..தனதுகாதலனுடன் வாழ்ந்துவிடத்துடிக்கின்றாள்.உணர்சிவசமான இந்தகாட்ச்சிகளை அற்புதமாக வடித்திருக்கின்றார்கள்..

பின்பு தனதுகாதலி தனது நினைவுகளையும் உயிரையும் மெதுவாக இழந்து கொண்டிருக்கின்றாள் என்பதனை காதலன் உணரும் காட்ச்சிகள் உயிரோட்டமாகவும் கண்களை கலங்கவும் வைக்கின்றது..அதன்பின்னர் வரும்காட்ச்சிகள் கவிதைகள்...அதைவிபரித்து கூறுமளவிற்க்கு எனக்கு திறமைபோதாதது.நீங்களே திரையில் பார்த்து அனுபவிக்கவேண்டிய இனியஅனுபவம் அது...

.நடிகர்கள் ஒவ்வொருத்தரும் போட்டிபோட்டுக்கொண்டு நடிக்கின்றார்கள்..அதுவும் அந்த நடிகை... சும்மா பார்த்துகிட்டே இருக்கலாமுங்க..நீங்க நிச்சயமாக பார்க்கவேண்டிய படமுங்க பார்த்திட்டு சொல்லுங்க எப்படியிருக்கிறது என்று...

ஆன்லைனில் இத்திரைப்படத்தைப்பார்ப்பதற்க்கு..
http://www.youtube.com/view_play_list?p=248CAEBCDFB3EFB4&search_query=A+Moment+To+Remember

http://www.letmewatchthis.com/watch-22120-A-Moment-to-Remember--Nae-meorisokui-jiwoogae

பதிவிறக்கம் செய்துபார்ப்பதற்க்கு..

Tuesday, December 15, 2009

வேட்டைக்காரன் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்..


அண்ணன் விஜய் மேல எனக்குதனிப்பட்ட வேறுப்பு எதுவும் இல்லைங்கண்ணா..வேட்டைக்காரன் ரிலீஸ் நெருங்க நெருங்க எங்கபார்த்தாலும் அதைப்பற்றின போச்சுத்தானுங்க...இப்பவே எஸ்.எம்.எஸ் பறக்கத்தொடங்கிவிட்டது..அப்படி எனக்கு நண்பர்களினால் அனுப்பபட்ட சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்..

ரசிகர்:- எனுங்கண்ணா சாக்கடைக்குப்பக்கத்தில போய் சத்தமா கத்தீட்டு இருக்கீங்க?..
விஜய்:- சாமிக்கிட்ட மட்டும் தான் சைலன்சா போசுவன்... சாக்கடைக்கிட்ட இல்லை..

இவரு எப்படி 'சைலன்ஸா' பேசுவாருன்னு பிரஸ்மீட்டிங்கிலயே பார்த்திருப்பீங்க தானே..

which is the painful way of death? Poison, Murder, Accident!, Tsunami!!! DOnt worry. its simple very very simple. Watch '' Vettaikaran''..


எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?.. எம்ஜீஆர் வில்லங்களை பழிவாங்கினார்..விஜய் ரசிகர்களையே பழிவாங்கிறார்..


‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?
அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை...


குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...

"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."

reporter : ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன?


NDTV TV FLASH NEWS:

Bin Laden talks to ndtv
he was quoted saying
"VETTAIKARAN" release kum engalukum endha samdhamum illa,
naanga andha alavuku bayangaramanavangalum illai.


வேட்டைக்காரன் பஞ்ச்..

ஒருத்தன மட்டும் கொலைபண்ணினா அவன் கொலைகாரன்...
படம் பார்க்கிற எல்லாரையும் கொலைபண்ணினா அவன்தான் வேட்டைக்காரன்.


2020 ஆண்டு.. குழந்தை:-அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா:-ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை:-அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..

வேட்டைக்காரன் பாடல்:
”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,
ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,
படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”

படம் பார்த்த பின்பு:
“நிக்காம ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வாரேன் பாரு வேட்டைக்காரன்!.”

திரையரங்கிலிருந்து தப்பித்த பின்பு:
”என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது
படத்த பார்க்கையில கிர்ர்ருங்குது,
டர்ர்ருங்குது”

இறுதியில் படத்தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம்:
”நான் அடிச்சா தாங்க மாட்ட,
மவனே இனி நீ நடிக்க வர மாட்ட
மக்களை வாழு வாழு வாழ விடு
வாரேன் பாரு'கொலைகாரன்'




நன்றி-http://sms4vijay.blogspot.com

.