Wednesday, December 16, 2009

A Moment To Remember (2004 )மறக்கமுடியாத காதல்




திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுகின்ற அளவுக்கு எனக்கு அதைப்பற்றிய போதிய அறிவு இல்லைங்கன்னா..ஆனாலும் நான் மிகவும் ரசித்துபார்த்த படங்களைப்பற்றி உங்களோடசில விடயங்களைப்பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்..

இன்று பார்க்க இருப்பது A Moment To Remember எனும் கொரியன் திரைப்படமாகும்.ஏற்கனவே நீங்கள் உலகத்திரைப்படங்களை பார்ப்பவர்களாக இருந்தால் இதனை நிச்சயம் பார்த்திருப்பீர்கள் எனநினைக்கின்றேன்.காதலில் தோல்வியுற்று விரக்தியடைந்த நிலையில் இருக்கும் பெண்ணிற்க்கும்
வாழ்க்கையில் இன்பத்தையே காணமல் துன்பத்தையே அனுபவித்து முரட்டுதனமாக வாழும் ஒரு இளைஞனும் எதிர்பாரதசந்தர்பந்தில் சந்திக்கின்றார்கள்..

மோதலுடன் தொடங்கும் சந்திப்புக்கள் மெதுவாக காதலாக உருமாருறுகின்றது..காதல்காட்ச்சிகளை பார்த்துகொண்டே இருக்கலாம்..மிக அன்றுபுதமாக படமாக்கியிருக்கின்றார்கள்..இவர்களின் காதல் அந்த இளைஞனைப் பொறுப்புள்ளவனாக்குகிறது..அவளுக்காக தனது தகுதியை முன்னேற்றதொடங்குகின்றான்.நல்ல வேலையிலும் சேர்ந்து காதலியையும் கைப்பிடிக்கின்றான்..இப்படிஒரு இன்பமயமாக சென்றுகொண்டிருக்கும் காதல்தம்பதிகளின் வாழ்க்கையில் அணுகுண்டாக வந்து விழுகின்றது ஒரு செய்தி...


அந்தப்பெண்ணுக்கு அடிக்கடி ஞாபகமறதிப் பிரட்சனை வந்ததால்..பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போகின்றாள்..அங்கு அவளைப்பரிசோதித்த மருத்துவர்..அவள் Alzheimer's disease எனும் அரியவகையான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்..அவளது மூளை சிறிது சிறிதாக இறந்து கொண்டிருப்பதாகவும்..அதன் முதல்கட்டமா அவள் சிறிது சிறிதாக தனது ஞாபகசக்தியை இழந்து தன்னனையே யார் என்று அறியமுடியாத நிலைமைக்கு ஆளாகிவிடுவார் என்றும் கூறுகின்றார்..

அந்த அதிர்ச்சியை தாங்கமுடியாத தாங்கமுடியாத அவள் தனது காதல்கணவன் இதனை எப்படித்தாங்குவான் என நினைத்து அவனிடம் இந்தவிடயத்தினை மறைக்கின்றாள்..தான் தனது ஞாபகங்களை முற்றுமுளுதாக மறந்துவிடமுன்னர்..தனதுகாதலனுடன் வாழ்ந்துவிடத்துடிக்கின்றாள்.உணர்சிவசமான இந்தகாட்ச்சிகளை அற்புதமாக வடித்திருக்கின்றார்கள்..

பின்பு தனதுகாதலி தனது நினைவுகளையும் உயிரையும் மெதுவாக இழந்து கொண்டிருக்கின்றாள் என்பதனை காதலன் உணரும் காட்ச்சிகள் உயிரோட்டமாகவும் கண்களை கலங்கவும் வைக்கின்றது..அதன்பின்னர் வரும்காட்ச்சிகள் கவிதைகள்...அதைவிபரித்து கூறுமளவிற்க்கு எனக்கு திறமைபோதாதது.நீங்களே திரையில் பார்த்து அனுபவிக்கவேண்டிய இனியஅனுபவம் அது...

.நடிகர்கள் ஒவ்வொருத்தரும் போட்டிபோட்டுக்கொண்டு நடிக்கின்றார்கள்..அதுவும் அந்த நடிகை... சும்மா பார்த்துகிட்டே இருக்கலாமுங்க..நீங்க நிச்சயமாக பார்க்கவேண்டிய படமுங்க பார்த்திட்டு சொல்லுங்க எப்படியிருக்கிறது என்று...

ஆன்லைனில் இத்திரைப்படத்தைப்பார்ப்பதற்க்கு..
http://www.youtube.com/view_play_list?p=248CAEBCDFB3EFB4&search_query=A+Moment+To+Remember

http://www.letmewatchthis.com/watch-22120-A-Moment-to-Remember--Nae-meorisokui-jiwoogae

பதிவிறக்கம் செய்துபார்ப்பதற்க்கு..

4 comments:

U.P.Tharsan said...

ஆஹா... படத்துக்கு விமர்சனம் எழுதிரது மட்டுமல்லாது. அதை பார்க்க கூடிய வழியும் காட்டுரிங்களே

சூப்பர் ரஜீபா...

Keddavan said...

எப்படியும் தேடிக்கண்டு பிடிக்க சிலநிமிடங்கள் செலவழிக்க போறங்க..அந்த நிமிடங்களை அவங்களுக்N சேமித்து கொடுக்கலாம் என்றுதான்..

பாலா said...

லிஸ்டில் போட்டு வச்சிக்கறேன் தல. பொறுமையா இருக்கும் போது.. படத்தை பார்க்கிறேன். Netflix-ல் இல்லை. :(

Keddavan said...

வருகைக்கு நன்றி பாலா..நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பாருங்க..