அவர்களது பறக்கும் தட்டு சிறிய ஓடமாகவே இருப்பதால்.அவர்கள் அண்டவெளியில் ஆகத்தொலைவில் இருந்து வந்திருக்கமுடியாது.
ஏனெனில் அந்தச்சிறிய ஓடத்தினால் பலகோடி பில்லியன் தூரத்தினை
கடந்து வருவதற்க்குரியஎரிபொருளையோ ,உணவுக்களஞ்சியப்படுத்தலையோ
கொண்டிருக்கமுடியாது.இதுவரையில் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் எந்த உயிரினமும் வாழவதற்க்கான சாத்தியக்கூறு காணப்படவில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.
ஆகையால் அந்த உயிரினம் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்ததென்பது நியாயப்படுத்த முடியாத வாதமாகிவிட்டது.எனவே எனது கருத்தென்னவெனில் அவர்கள் வேற்றுக்கிரகவாசிகளல்ல இந்தப்பூலோகத்தைச் சேர்ந்தவங்களே ஆகும்.ஆனால் அவர்கள் இப்போது இந்த உலகத்தில்வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இல்லை... கிட்டதட்ட 3000 அல்லது 4000 ஆண்டுகள் பிற்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் ஆகும்.
இதனைப்பற்றி விரிவாகப்பார்ப்போமாயின் அங்கிகளின் கூர்ப்புக்கொள்கை (Theory of oragaic Evaloution)யினைப்பற்றி நீங்களஅறிந்திருக்கலாம்.
இங்கிலாந்தைச்சேர்ந்த இயற்க்கை விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வின்(1809-1882) அவர்கள் இந்த கொள்கையினை உருவாக்கினார்.ஒரு விலங்கு தனது சூழலுக்கு தகுந்தபடி காலப்போக்கில் தன்னை இயைபாக்கம் அடையச்செய்கின்றது என்பதாகும்.மனிதனுக்கு இந்த பாலமான கைகளும், கால்களும் வாய்த்திருப்பதற்க்கு காரணம் அவன் கடினமாக உழைத்து வேலை செய்யவேண்டியிருப்பதினாலும் அவனது தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ளுவதற்க்காகவும் ஆகும்.
ஆனால் இப்பொழுது மனிதன் நவீன உபகரணங்களையும் , பலவிதமான தொழில்நுட்பத்தினையும் கண்டுபிடித்திருப்பதால் அவனுக்கு கடினமான வேலை செய்ய வேண்டிய செய்யவேண்டிய அவசியமில்லாமல் போகின்றது.மூளை மட்டும் மிகமுக்கியமானதாகவும் , இப்போது காணப்படும் வழுவான கை, கால்கள்க்கொண்ட உடல் தேவையற்றதாக மாறிவிடும். இதனால் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் போது மனிதனது உடல் தேவையற்றதாக மாறிவிடும்..
இதனால் பல்லாயிம் ஆண்டுகள் செல்லும்போது மனிதனது உடல் இதற்கான இயல்பாக்கத்தை அடைந்து மெல்லிய கை, கால்ளைக்கொண்ட குறுகிய உடலாகவும் தலை மட்டும் அசாதாரணமாக வளாந்து பெருத்துக்காணப்படும். என ஒரு பிரபலமான விஞ்ஞானி அறிக்கை விட்டுள்ளார்.அவர்குறிப்பட்ட அந்தத் தோற்றம் இன்றைய மக்கள் கண்டதாகக்கூறப்படுகின்ற வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.
இதன் மூலம் வேற்றுக்கிரகவாசியெனக்கூறப்படுபவர்கள்.இந்தப் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் தான் ஆனால் இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல... பல்லாயிரம் ஆண்டுகள் பிற்பகுதியில் வாழந்துகொண்டிருக்கும் மனிதர்கள் தான் என்பதை ஓரளவு ஊகிக்கலாம்.
அவர்களால் எப்படி இந்தக்காலத்திற்க்கு வரமுடியும் என நீங்கள் யோசிக்கலாம்.இன்றைய நூற்றாண்டிலேயே மனிதன் இவ்வளவு சாதனைகளைப்புரிந்துவிஞ்ஞாத்திலே கரைகண்டு பால்வீதியினையே தனது கண்பார்வைக்குள் வைத்திருக்கிறான் என்றால் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்திருக்கும் போது எத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருப்பான்.இந்தப் பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கத்தொடங்கியிருப்பான். தொழில்நுட்பம் , விஞ்ஞானம் ஆகிய இரண்டினதும் எல்லையினைத்தொட்டிருப்பான்.
எமது பிரபஞ்சத்தில் (black holes) கருந்துளை அல்லது கருமைத்துவாரங்கள் என அழைக்கப்படும் இறந்த நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றின் அருகே செல்பவர்களுக்கு நேரம் மெதுவாகவே நகரும். ஆனால் இங்கே பூமியில் இருப்பவர்களுக்கோ நேரம் வழமை மாதிரியே ஓடும்.இந்த நேர இடைவெளி பூமியிலே பல வருடங்களுக்கு சமமானதாகும்..
இந்த கருந்துளைகள் எப்படி உருவாகின்றது என்றால் நட்சத்திரங்கள் பலமில்லியன் வருடகாலத்துக்கு வாழ்கின்றன இறுதியில் அவற்றுக்கும் அழிவுகாலம் வருகின்றது.தனது அணுசக்தி முழுவதும் முடிவடைந்ததும் ஈர்ப்புச்சக்திக்கு ஈடுகொடுக்கமுடியாது நட்சத்திரமானது சுருங்கத்தொடங்குகின்றது.இவ்வாறு இன்னமும் அதிகமாக சுருங்கி மாபெரும் அடர்த்தியுடன்கூடிய ஒரு புள்ளிப்பொருளாகலாம்.இதுவே கருமைத்துவாரமாகும்.
இன்றே பால்வீதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனிதன் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்திருக்கும் சமயத்தில் கருமைத்துவாரத்தை கைப்பற்றி அதன் நேர மாற்ற கோட்பாட்டினை ஆராய்ந்து நேரத்தை வெல்லும் கலையை அறிந்து விஞ்ஞான கற்பனை கதையில் வந்ததை போன்ற ஒரு டைம் மெசினை(time machin)தாயரிக்கலாம்.
இதன் முலம் மனிதனால் நேரத்தை தனது ஆட்சிக்குட்பட்டதாக மாற்றமுடியும்.நேரத்தை வெல்லுவதன் முலம் கடந்த காலத்திற்க்கு சென்று வருவதற்க்கான கலையை கண்டுபிடித்திருக்கலாம்.இப்படி கடந்த காலத்தில் இருந்து வந்தவர்களை கண்ட பூலோகமக்கள் அவர்களின் பிரமிக்கவைக்கும் தொழில்நுட்பவளர்ச்சியைக்கண்டு அஞ்சி தங்களை விட உயர்ந்த தொழில்நுட்பத்தினை கொண்ட இவர்கள் வேறு கிரகமொன்றில் இருந்து வந்விருக்கவேண்டும் என முடிவெடுத்திருக்கின்றார்கள்.
வேற்றுக்கிரகவாசிகளாக இருந்திருந்தால் அவர்கள் மேலோட்டமாக பூமியில் ஆராய்ச்சி செய்யாமல் நேரடியாக தரையிறங்கி பூமியிலுள்ளவர்களுடன்தொடர்பு கொண்டிருப்பர்கள்.
ஆனால் இந்த மனிதர்களோ தமது சிக்கலான தொழில்நுட்பத்தினை இன்றையமக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதனாலும் அப்படியே அறிந்துகொண்டால் அவர்களது இயல்புவாழ்க்கை மாறிப்போய் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற பயத்தினாலுமே இந்த பூமியில் சட்டபூர்வமாக தரையிறங்காமலும் ,தடயங்களையும் , சாட்ச்சிகளை மறைத்தும் சாதுர்ரியமாக வந்து செல்லுகின்றார்கள் என்பதை ஊகிக்கமுடிகின்றது.எனவே இந்த கருத்து அலட்ச்சியப்படுத்தப்படவேண்டியதல்ல ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவேண்டியது என நிச்சயமாகக்கூறாலாம்.
15 comments:
ஆராட்சிக்குரிய கட்டுரையென்றால் அதில் மிகையில்லை.
அருமை ராஜீபன்.சாத்தியங்களை விட்டு விடுவோம்.
நல்ல வித்தியாசமான சிந்தனை.
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புள்ள விகடகவி,
கால இயந்திரம் என்பது இன்னும் சரியாக புரிந்துகொள்ள முடியாததாகவும் நிறைய்ய கேள்விகளை முன்வைப்பதாகவும் இருக்கின்றது. காலத்தினூடே பயணம் என்பது இன்னும் சாதியப்படாததாகவே எனக்குத் தோன்றுகிறது. என்னால் பின்வரும் கேள்விக்கு விடை கண்டுகொள்ள இயலவில்லை. தங்களால் இயன்றால் முயற்சிக்கவும்.
உதாரணத்துக்கு, ஒரு கால இயந்திரப்பயணி கி.பி 2500 ல் இருந்து கிளம்பி கி.பி 2495 ஐ அடைகிறான் என்று வைத்துக்கொள்வோம், அப்போது அவன் தன்னை தானே பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒரு வேளை
அந்த நிலையில் அவனை எப்படியோ இறந்து விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம், இப்போது ஐந்து வருடம் கழித்து அவன் உயிருடன் இருப்பானா இல்லையா?
அதே போல், அவன் எதிர் காலத்தில் பயணிக்கும் பட்சத்தில் அவனுடைய எதிர்காலத்தை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்ப்போல் நிகழ்காலத்தை சரி செய்து கொண்டால் அந்த எதிர் காலமே மாறிப்போய் விடுமே.
ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணை கட்டுதே...
போரிஸ்கா என்ற ஒரு இண்டிகோ சிறுவனைப் பற்றி wordpress ல் தமிழில் படித்திருக்கிறேன். ஆனால் அந்த சுட்டி வேலை செய்யவில்லை. ஆகவே ஆங்கில சுட்டியை அளித்திருக்கிறேன்.
இந்த சுட்டியை பார்த்தால் இன்னும் தலை சுற்றுகிறது.
நன்றி.
R.சுதாகர்.
அந்த படங்கள் வித்தியாசமான கற்பனை.
அய்யோ தலை சுத்துதே.. ஆனாலும் சுவாரசியமான விடயம்...
அண்ணா வணக்கும், நீங்கள் ஒரு திறமையான மனிதர். ஏனேன்றால் எப்போதுமே.. தெளிவா குழப்புவீர்கள். :-))
எண்டாலும் மச்சி இது ஒரு நல்ல பதிவு. நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக.. கருமைத்துவாரங்கள்
தொடர்ந்து எழுதுங்கள் ஜயா
பின்னூட்டங்களை எழுதி என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்..
//ஆராட்சிக்குரிய கட்டுரையென்றால் அதில் மிகையில்லை//
நன்றி தீவிரவாசகன்
//சாத்தியங்களை விட்டு விடுவோம்.
நல்ல வித்தியாசமான சிந்தனை//
வித்தியாசமான சிந்தனைகள் தான் அரியபல கண்டுபிடிப்புக்களுக்கு ஆரம்பமாக இருந்தன..
//ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணை கட்டுதே...//
எமக்கு இப்பவே கண்னைக்கட்டுது..ஆனால் பல வருடங்களுக்கு முன்னரே டைம்மெசின் என்பதை பற்றி கற்பனை செய்த அந்த விஞ்ஞான கதாசிரியரின் அறிவு சிலிர்க்கவைக்கின்றது
//அந்த படங்கள் வித்தியாசமான கற்பனை//
கூகிலுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்..
//அய்யோ தலை சுத்துதே.. ஆனாலும் சுவாரசியமான விடயம்...//
நன்றி ஓவியா
// நீங்கள் ஒரு திறமையான மனிதர். ஏனேன்றால் எப்போதுமே.. தெளிவா குழப்புவீர்கள். :-))//
தர்சன் இது எல்லாம் உங்களிடத்தில் இருந்து கற்றுக்கொண்டது தானே..எனக்கு வலைத்தளத்தைப்பற்றி கற்றுத்தந்த குருவே நீங்கள் தானே..நீங்களும் உங்கள் காதலி........ யும் பல்லாண்டு காலம் சேர்ந்து வாழவேண்டும் என வாழ்த்துகின்றேன்...:)
நல்ல ஆராய்ச்சிதான்.
இலகுவாக இப்படி சிந்திப்போமே.. - கி.பி.4000 இல் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜீபன் கி.பி. 2008 இற்கு வந்து பதிவு எழுதிக்கொண்டிருக்கும் ரஜீபனைக்கண்டு ஹாய் சொல்கிறார். இடையிலுள்ள காலத்தை தவிர்த்து பார்த்தால் தற்போது ரஜீபன் என்ற இரண்டு உயிர் (உயிரும் உடலும்)இருக்கிறதா?
மேலும் கி.பி 4000 இலிருந்து வருபவருக்கு இது கி.பி.2008 அல்ல 4000தான். அதுபோல கி.பி 2008 இலுள்ளவருக்கு இது கி.பி 4000 அல்ல 2008 தான். எனவே இதற்கும் ஒரு சார்பு நேரம் (relative time) தேவைப்படுகிறதே..?!
நன்றி கோகுலன்
//கி.பி.4000 இல் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜீபன் கி.பி. 2008 இற்கு வந்து பதிவு எழுதிக்கொண்டிருக்கும் ரஜீபனைக்கண்டு ஹாய் சொல்கிறார்.//
இந்த உதாரணத்திற்க்கு நான் தானா கிடைச்சன்.நீங்க சொல்லுற மாதிரி நடக்க சந்தர்ப்பம் இல்லை..என்னெ;றால் 2008 ல் வாழ்ந்திட்டு இருக்கிற ரஜீபன்
4000 வரைக்கும் உயிர்வாழமுடியாது.அப்படியெ நான் 4000 ஆண்டு வரைக்கும் இருக்கனும் என்று ஒரு நல்லவார்த்தை சொன்னதுக்கு நன்றி..
//இதற்கும் ஒரு சார்பு நேரம் (relative time) தேவைப்படுகிறதே..?!//
இதைப்பற்றிய ஆராட்சிகள் இப்பொழது தான் ஆரம்பிக்க பட்டுள்ளன..இந்த கேள்விக்களுக்கான சரியான விடைகளைப்பெற நாம் இன்னும் காத்திருக்க வேண்டும்..
2002 ல் வெளியான the planet of the apes திரைப்படம் கூட இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது .கட்டுரை மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் படி அமைந்துள்ளது .
நன்றி
நன்றி அதிஷா..எளிமையான உரைநடையில் எழுதும் போது பெரிய பெரிய விடயங்களைக்கூட இலகுவாக மக்களிடம் சோர்க்கமுடியும்.நானும் அந்த படத்தினைப்பார்த்து இருக்கின்றேன்.என்னை மிகவும் கவர்ந்த படங்களில் அதுவும் ஒன்று...
mm arumajaana katpanai,,ithu enaku purivathatku melum arivu thevai,,athai unghalidame pettu kolkiren..nantri rajeepan anna
mm arumajaana katpanai,,ithu enaku purivathatku melum arivu thevai,,athai unghalidame pettu kolkiren..nantri rajeepan anna
This is very good artical. please keep writting this kind of articals.
இந்த கதையும் நல்லாத்தான் இருக்கு!
Post a Comment