சாதரணமாக இவரதுபடங்கள் பல பாகங்களாக வந்து சாதனை படைத்துள்ளன இவரது படங்கள் தொழில்நுட்பரீதியாக பல சாதனைகளைப்படைத்துள்ளன..இவரது உலகத்தரமாக கற்பனைகளைக்கேட்டு ஓவர்டா சாமி என்று முனுமுனுத்துக்கொண்டுடிருக்கும் உங்களுக்கு அடுத்ததா ஒரு உள்ளூர் இயக்குனர்..ஊரேல்லாம் அவருக்கு பெயரு..
உலக இயக்குனர்...
பேரரசு
இவருக்கு கதைகூட முக்கியமில்லை காதாநாயகன் முக்கியம் அதை விட படத்தோட தலைப்பு ஊர் பேரில இருக்கனும்.யாரா ஹீரோவா போடலாம் வேறயாரு எங்க இளையதளபதிதான்..படத்தோட தலைப்பு வேலூர்..
அடுத்த முக்கியமான விசயம்..பன்ஜ்ச் டயலாக்..
"பாட்டி சுட்டா வடை..வெட்டமாவிட்டா சடை..என் பின்னாடி பாரு மக்கள் படை..."
அதுவும் ஒக்கே..பாட்டு..அட அதையும் இவரே போரடிக்கிற நேரத்தில டம்மலக்கே டிம்மாங்கோ போன்ற அரிய இலக்கிய வரிகளைப்போட்டு எழுதுமுடிச்சுடுவார்..குத்தாட்டம் ரெடி..நாலு பைட் ரெடி..இப்ப கருமம் கதைமட்டும் தான் தேவை..இந்தக்கதையை எங்க இளைய தளபதிக்கு ஏத்தமாதிரி எப்படி மாத்தலாம்..
ஆரம்பகாட்ச்சி..ஓரில இருக்கிற கஸ்டபட்டவங்க ஏழைங்க எல்லாரும் கூட்டமா ஓடி வராங்க..அவங்க போய் நிக்கிற இடம் ஒரு இத்துப்போன மெக்கானிக்கடை அதில நட்டுக்கழட்டிற மெக்கானிக் தான் எங்க ஹீரோ..தம்பி நீங்கதான் எங்களை காப்பத்தனும் ஊர் எல்லாம் தீவிரவாதிங்க தொல்லை தாங்க முடியல..பக்கத்து நாட்டிலிருந்து வந்து தாக்குதல் நடத்தீட்டு ஓடிபோயிடுறங்க..அரசாங்கம் கூட எங்களை கண்டுகிறது இல்லை நீங்க தான் இந்த அராஜகத்தை தட்டிகேட்கனும்..என்று சொல்லுறங்க.அதைக்கூட பெறுத்துக்கொண்டு அமைதியாக போயிடுறாரு அமைதிவிரும்பியான நம்பஹீரோ..இதுக்கு காரணம் அவரையே நம்பியிருக்கும் அவரேட ஒரே தங்கட்சி தான்..அப்படியே கொஞ்சநேரம் தங்கட்ச்சி சேன்டிமேன் காட்ச்சியால மக்கள களங்கவைச்சிடுறாரு..அப்படி பட்ட தங்கட்ச்சி பாசமலர் அண்ணனுக்காக ஆசை ஆசையா ஓரு வடையை சுடுகின்றார்...இதை அறிந்துகொண்ட தீவிரவாதிகள் இந்தபாசவடையை அண்ணன் சாப்பிடுவதைத்தடுப்பதற்க்காக தங்கச்சியை போட்டுதள்ளிட்டு வடையைக்கடத்திக்கெண்டு பாகிஸ்தான் தப்பித்துச்சென்றுவிடுகின்றார்கள்.இதனால் வெகுண்டெழுந்த நம்ம ஹீரோ இனிமேல் சரவெடி என்ன இடைவெளையில் பாகிஸ்தானுக்கு கிளம்புகின்றார்..
intermission
பாகிஸ்தான் போன எங்க விஜய் தனது பழைய நண்பன் வடிவேலு வீட்டில தங்கியிருந்து தீவிரவாதிகளை தீவிரமா தேடத்தெடங்குகிறார்..இடையில பாகிஸ்தானிலயே பெரிய பணக்காரர் மகள் அசின் இவரை பார்த்ததும் காதல்கொண்டு இவருக்கு பின்னால நாயாபேயா அலைந்துகொண்டிருக்கிறாள்.இவரும் போனாப்போகுது என்று அவருக்கு வாழ்க்கைகொடுக்கின்றார்.தீவிரதேடுதலின் பின்னர் வடையை கடத்திவைத்திருக்கும் தீவிரவாதிகளின் தலைவன் ஒசாமா பின்லாடன் என்பதை கண்டுபிடிக்கின்றார்..உடனே ஒசாமாவுக்கு முன்னால போய் என்ட வடையை அடையநினைச்ச உன்னை நிம்மதியா இருக்கவிடமாட்டன்டா என்று டயலாக்பேசுகின்றார்..உடனே ஒரு நூறு தீவிரவாதிகள் எங்கையிருந்தோ ஓடிவந்து துப்பாக்கியால விஜய சரமாரியாக சுடுகின்றனர்..சீரிப்பாய்ந்து வந்தகுண்டுகள் இவரை சீண்ட பயப்பட்டு அவரை மூன்றுதரம் வலம்வந்து கடைசியாக அவர் காலடியில் விழுகின்றன.இதனை பார்த்து பயந்துபோன ஒசமா ஒரு ரொக்கட் லான்சர எடுத்து விஜயை நோக்கி சுடுகின்றார்..பாய்ந்து வந்த குண்டைபிடிச்சு முதுகு செறிந்துவிட்டு அதை திருப்பி ஒசாமாவை நோக்கி போடுகின்றார் ஹீரோ..ஒசாமா கதை ஓவர்..கருகின ஒசாமின் கையில் இருந்த வடையை எடுத்து கண்ணீர் மல்க சென்டிமெண்டாகின்றார்..அப்புறம் அந்தவடையையும் எடுத்திட்டு டெலிபோன் பூத்தில போய் ஒபாமாவுக்கு ஒரு போனை போட்டு இப்படித்தான் பழிவாங்காய்ட்ச்சு என பேருமையேல்ல தேவையில்லை நீங்களே வைச்சுக்குங்க என்று சொல்லுறாரு.இதைக்கேட்ட ஒபாமா அமெரிக்காவே உங்களுக்கு கடமைபட்டு இருக்கு என்று உணர்ச்சி வசப்பட.அசினையும் கையிலபிடிச்சிட்டு வெற்றிகரமா நடையக்கட்டிறாரு நம்ம ஹீரோ..அப்புறம் என்ன ஹவுஸ் புல் போட்டுதான் பாலாபிசேகம் தான்...
5 comments:
இரண்டாவது வடை எனக்கே
அது வடிவேலுவிடம் இருக்கின்றது Niroo
வணக்கம்,
இராஜராஜேஸ்வரி அவர்கள்
சொன்னது போல..
10 பார்ட் ஓட்டலாம்..
சூப்பர்.
அண்ணன் வடிவேலுவோட காமெடி சீனையே காணோம்..
அவ்வ்வ்வ்வ்...
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
வடிவேலுவ சினிமாவில Band பண்ணிட்டாங்க தெரியாதா?..
\\சீரிப்பாய்ந்து வந்தகுண்டுகள் இவரை சீண்ட பயப்பட்டு அவரை மூன்றுதரம் வலம்வந்து கடைசியாக அவர் காலடியில் விழுகின்றன.\\ ஹா....ஹா....ஹா....ஹா....விஜயோட நாலு படத்த பார்த்த திருப்தி இந்த பதிவைப் படிச்சதும் வந்தது. [ஏன்னா, நாலு படத்திலு இதே கதைதானே!]
Post a Comment