Friday, December 11, 2009

சூறாவளியில நான் மாட்டுப்பட்டகதை


பதிவுலகில் பல நல்ல எழுத்தாளர்களினைப்படித்து படித்து நானும் ஏதாவது எழுதித்தான் பார்ப்போமே என்று தான் வலைப்பதிவு எழுதவே ஆராம்பித்தேன்.ஆனாலும் என்ன எழுதிறது என்று தெரியாததாலயே..பல நாட்கள் யோசிச்சு யோசிச்சு மண்டைகுளம்பிப்போய் ஒன்றுமே எழுதாமவிட்டுட்டேன்..இப்ப என்னுடைய வாழ்க்கையில நடந்த சில சுவாரஸ்யாமன (அப்படின்னு நான் நினைக்கிற)விடயங்களை எழுதலாம் என்று நினைக்கிறன்..எதில இருந்து ஆரம்பிக்கிறது எதிலமுடிக்கிறது என்று ஒரு ஜடியாவும் இல்லை. சூறாவழில இருந்து ஆரம்பிப்பம்.

.சில வருடங்களுக்கு முன்னால கொழும்பில மினி சூறாவளி வந்ததது இல்லை அதைப்பற்றித்தான் சொல்லப்போறன். ஒரு வழக்கமான பகல்நேரத்தில புத்தகப்பூச்சியான நம்ம ஹீரோ புத்தம் படிக்கிறதுக்காக லைபரரிக்கு போனாரு..( ஹீரோவா எவன்டா அவன் என்று நீங்க கோவத்தோட கத்துறது கேட்கிது)..ஆனா என் கதையில நான் தானுங்க ஹீரோ அதால கொஞ்சம் பொறுத்தருளுங்கள்.. புத்தகத்தோட புத்தகமாக புதைஞ்சுபோய் இருந்த சமையத்தில திடிறென்று லைபரரிக்கு வெளியால பலமான கூச்சல் சத்தங்கள் கேட்டது..உடனே வெளியால என்னதான்டா நடக்குது என்று பார்க்கிறதுக்கான ஓடிப்போனோன்..பராக்கு பார்க்கிறதுக்கு எங்களை மிஞ்சமுடியுமா?

அங்கவந்துபார்த்த எல்லாரும் ஒரு திசையைப்பார்த்து ஓடிட்டு இருந்தாங்க.என்னங்கடா எல்லாரும் ஓடுறாங்க..இலவசமா சாப்பாடு போடுறாங்களோ இல்லை யாரவது சண்டை பிடிச்சிட்டு இருக்காங்களோ என்று பார்க்கும் ஆவளினால் நானும் அவங்களை பின்தொடந்து ஓடிப்போனேன்.. திடிரென்று ஒரு இடத்தில நிண்டு வானத்தை பார்த்திட்டு இருந்தாங்க.. நான் நின்றுகொண்ட இடத்தில் வெயிலோடு தெளிவா இருந்தவானம் அவங்க பார்த்திட்டு இருந்த திசையிலோ கரும்முகிள்கலோடு மழைவானம் மாதிரி மின்னல்களோடு பார்க்கவே பயங்கரமாக இருந்தது...திடிறென்று அந்த திசையிலிருந்து குளிர்காற்று வீசத்தொடங்கியது..எனக்கு அப்பொழுது என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை ஏதோ அதிசய மாஜிக்நிகழ்சிய தொலைக்காட்ச்சியில அதிசயமா பார்க்கிற மாதிரி பார்த்திட்டு இருந்தன்..என்னுடைய கையில் லைபரரி புத்தகங்களும் குடையொன்றும் இருந்தது..அந்த குடை வழியில ஒருத்தர் எங்கவீட்டில இருந்து இரவல்வாங்கிட்டுப்போன குடைய வழியில என்னப்பார்த்து கொடுத்திட்டு போய்ட்டார்..வீணா இதையும் காவவேண்டி வந்திட்டுதோ என்று எரிச்சலுடன் இருந்த எனக்கு இப்ப மனதிற்க்குள் கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டது..எல்லாரும் மழையில நனையப்போறங்க நான்மட்டும் குடைவச்சுட்டு இருக்கனே என்று..

இதமாக வீசிக்கொண்டிருந்த குளிர்காற்று மிகவிரைவாகவே வலுக்கத்தொடங்கியது.அதனுடன் இணைந்து மழைத்துளிகளும் எங்களை நனைக்கத்தொடங்கியது..உடனே நானும் பந்தாவா குடையை விரிச்சு பிடிச்சுகிட்டன்..ஆனால் குடையை பிடிச்சுக்கொள்ள முடியாமல் காற்று தள்ளிக்கொண்டிருந்தது..நான் இதனுடன் மல்லுக்கட்டிட்டு இருக்கும் போது எனக்கு முன்னாடி இருந்த கூட்டத்தினர் அலறிஅடிச்சுக்கிட்டு பின்னாடி ஓடத்தொடங்கினார்கள்..நான் என்னடா நடக்குது என்று பார்க்கும் பொழுது யார்வீட்டிலோ போட்டிருந்த கூரை ஒன்று என்னை நோக்கி பறந்து வந்தது..இது எல்லாம் சில வினாடிகளுக்குள் நடந்துமுடிந்து விட்டது..நான் உடனே சுதாகரித்துக்கொண்டு பின்னோக்கி ஓடத்தொடங்கினேன்.காற்றுபலமாக வீசியதால் எனதுகுடை உடைந்து முன்னோக்கி பறந்தது..நான் கையில் வைத்திருந்த புத்தகமும் கைதவறி கிழே விழுந்தது..நான் பதறியபடி அதை பாயந்து எடுத்துக்கொண்டு பின்னோக்கி பார்த்தேன்..அந்தக்கணம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அந்தகாட்ச்சியினை கண்டேன்.

.இருண்டவானம் சூழ மின்னல்கள் வானம் முழுவதும் பரவலாக மின்னிக்கொண்டிருக்க ஒரு கரியநிறத்தில் பெரிய சுழல்காற்றுடன் ஒரு சூறாவழியொன்று என்பின்னே வேகமாக வந்துகொண்டிருந்தது..நான் இதுநாள்வரை சூறாவழியினைப்பற்றி ஒரு சில கொலிவுட் படங்களில் பார்த்து இருந்தாலும் நேரடியாகப்பார்த்ததில்லை..இன்னும் இங்கே இருந்தால் சட்டினி ஆகவேண்டியதுதான் என்று தொரிந்தால் தடுமாறிய கால்களுடன் வேகமாக ஓடத்தொடங்கினேன்..சிறிது நேரம் ஓடியபோது ஆகண்ட ஒரு மரத்தினைக்கண்டேன்..இதன்பின்னால் ஒழிந்துகொணடால் என்ன? என என்மனம் சொல்லியது..ஆனாலும் வேண்மாம் வீடுபக்கம்தானே அங்கயே போய்விடுவோம் என வேகமாக ஒடினேன்..என்மீதி எதேதோ சிறியபொருட்கள் வந்து மோதியது..அதனை எல்லாம் நான் கவனிக்கும் நிலையில் இல்லை..எனது வீடுகண்ணில் பட்டதும் எனக்கு சொர்க்கத்தை கண்டமாதிரி ஒரு ஆனந்தம்..

வேகமாக ஒடிப்போய்கதவை திறந்து.உள்ளே பாய்ந்து அம்மா சூறாவளி என பலமாக கத்தினேன்..தொலைக்காட்ச்சி பார்த்துகொண்டிருந்த அனைவரும் எனது கூச்சலை கேட்டுபதறி ஒடிவந்தர்கள்..எனது தங்கை யன்னல் அருகில் அமர்ந்து இருந்தவன் என்னை நோக்கி எழுந்து வந்த மறுநிமிடம் அந்த யன்னல்கள் வேடித்துச்சிதறியது.எமது வீடு இப்பொழுது அந்த சூறாவளியினுள் மாட்டியிருந்தது என அறிய முடிந்தது..அந்த சில நிமிடங்கள் நாங்கள் அனைவரும் பயத்தில் உறைந்துபோய் இருந்தோம்;..வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தது..யன்னல்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி கண்ணாடிகள் வெடித்து சிதறியது..வீடே முறிந்து விழுந்து விடபோகின்றதே என பயந்தோம்..வீடு நடுங்கத்ததொடங்கியது..தங்கை பயத்தினால் அலறத்தொடங்கினால் ..இவையனத்தும் சிலநிடங்கள் மட்டும்தான்..திடிறென்டு யா னஅமைதி நிலவியது..புயல் எங்களை கடந்து போய்விட்டது என அறிந்துகொண்டோம்..மெதுவாக வெளியாக வந்துபார்த்தோம்..

வீதியெங்கும்..உடைந்த தளவபாடங்கள் இலைகுலைகள் வீட்டின் கூரைகள் சிதறிக்கிடந்தன..எல்லோரும் பயத்துடன் வீட்டிறக்கு வெளியே வந்து பார்த்திட்டு இருந்தாங்க.. நான் வீதியின் சுற்றும்முற்மும் பார்த்தபடி நடக்கத்தொடங்கினேன்..எல்ல இடமும் சேதங்களே காட்ச்சி அளித்தன..நான் வந்தபாதையினை பார்த்ததும் எனக்கு பகீர்என்று இருந்தது..ஏன் என்றால் நான் அப்பொழுது பின்னால் ஒழுpந்துகொள்ளலாம் என நான் நினைத்த அகண்ட மரம் யாரே கையால் பிடித்து முறுக்கிபோட்ட மாதிரி முறுகி சிதிலமடைந்து கிடந்தது..என்னைக்காப்பற்றின கடவுளுக்கு நன்றி சொல்லியபடி திரும்பி வந்தேன்.எங்கள் வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த கடையில் வேலைசெய்த பெடியன் கடையின் முகப்பில் இருந்த கூரையில் ஏறி என்னவோ செய்துகொண்டிருந்தான்..நான் அந்தகூரையின் கீழேபோய் நின்றபடியே
அவனும் பேச்சுக்கொடுத்தேன்..திடிறென்று கிறீச்சுடிடும் சத்தம் எங்கோ கேட்டது..அது அந்த கூரையில் இருந்து தான் கேட்டிருக்கவேண்டும் என உணர்ந்து அங்கிருந்து வேகமாக வெளியால் ஓடினேன்...வேளியே வந்து திரும்பி பார்க்கும் போது அந்தக்கடையின் கூரை அவனோடு சேர்ந்து மொத்தமாக கிழே விழுந்தது நொருங்கியது..நான் சிறிது தாமதித்திருந்தால் நானும் அங்கு மாட்டியிருப்போன் என உணாந்த போது முள்ளந்தண்டு சிளிர்த்தது..ஒரே நாளில் இரண்டு கண்டங்களில் இருந்து தப்பிய கதை இதுதானுங்க..கொஞ்சம் நீளமாம்போச்சுதா..நாங்க இப்பதானே எழுதிப்பழகிறேன்;..குறைகளை நிறைகுறைகளை சுட்டிக்காட்டுங்க நண்பர்களே..அப்பதான் நானும் முன்னேற முடியும்..

7 comments:

கலையரசன் said...

நல்லா எழுதுறீங்க ராஜீபன்!! கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதுங்க!!

கலையரசன் said...

நல்லா எழுதுறீங்க ராஜீபன்!! கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதுங்க!!

Keddavan said...

நன்றி கலையரசன் ..உங்களது ஊக்கங்கத்தினால் இன்னும் எழுதுவதற்க்கு முயறச்சிக்கிறேன்..

vasanth said...

nallaerukkirathu but srippum sinthanayum kalanthal ennum mun eruvathatku vaippu erukkirathu valththukal nanry

Keddavan said...

//nallaerukkirathu but srippum sinthanayum kalanthal ennum mun eruvathatku vaippu erukkirathu valththukal nanry/நன்றி வசந்தன் மாமா உங்கள் ஆதரவிற்க்கு..அடுத்தமுறை இன்னும் சுவார்ரசியாமா எழுத முயற்ச்சி செய்கின்றேன்..

U.P.Tharsan said...

//ஒரு வழக்கமான பகல்நேரத்தில புத்தகப்பூச்சியான நம்ம ஹீரோ புத்தம் படிக்கிறதுக்காக லைபரரிக்கு போனாரு..//

சொல்லவேயில்லை.... எப்ப இருந்து இந்த நல்ல பழக்கம்! ஒரு வேளை அதனாலதான் சூறாவளி வந்திச்சோ!?
:-)) ஏன்டா சூறாவளி வந்ததை தீபாவளி வந்த மாதிரி எழுதியிருக்க....

Keddavan said...

//:-)) ஏன்டா சூறாவளி வந்ததை தீபாவளி வந்த மாதிரி எழுதியிருக்க..//மச்சான் நீ அதிலமாட்டி இருந்த தெரிஞ்சு இருக்கும்..