Monday, December 14, 2009

உங்கள் வீட்டுத்தோட்டம் ஒரு மீன்தொட்டியினுள் இருந்தால்..

நீங்கள் இயற்க்கையின் அழகினில் மனம்லயிக்கும் ரசனையுள்ளவரா?..பச்சைப்பசேலேன இருக்கும் இயற்க்கைகாட்சிகளை கண்பதற்க்கு விரும்புகின்றவாரா?இன்றைய இயந்திரத்தமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழக்கின்றோம்.நகரங்களில் வாழ்பவர்களுக்கு அனேகமாக பசுமையான காட்ச்சிகளை காண்பதே அரிதானவிடயமாகஇருக்கின்றது..
ஒரு ரம்மியாமான எழில்கொஞ்சும் தோட்டம் உங்கள் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்?..அதுவும் உங்கள் வீட்டுமீன்தொட்டியினில் இருந்தால்..(உடனே எங்க வீட்டு மீன்தொட்டியிலும் தோட்டம் இருக்கு என ஒன்றிரன்று கடல்தாவரங்களையும் பிளாஸ்டிக் மரங்களையும் வைத்துக்கொண்டு சொல்லவராதீர்கள்)..இப்படியான இயற்கைதோட்டத்தினை உங்கள் மீன்தொட்டியினுள் உருவாக்கித்தரும் பணியினை "Nature Aquarium Style' செய்துதருகின்றார்கள்.



உண்மையான இயற்க்கைத்தாவரங்களை பொன்சாய் முறையில் வளர்த்து இதற்க்காக பயன்படுத்துகின்றார்கள்..மீன்தொட்டி என்னேரமும் தெளிவாக பார்க்ககூடியதாக இருக்கவேண்டும் என்பதற்க்காக விசேடபில்டர்களை உபயோகப்படுத்தியுள்ளார்கள்..உங்கள் ரசனைக்கேற்றபடி தோட்டத்தினை வடிவமைத்துக்கொடுக்கின்றார்கள்.இதை உருவாக்கியவர்களான ஜோர்ஜ்ம், ஸ்டிவனும் இதைப்பற்றி கூறுகையில் இவை சாதரணமீன்தொட்டிகள் அல்ல நந்தவனங்கள் எனக்குறிப்பிட்டார்கள்..உங்களில் வீடுகளில் மினித்தோட்டங்களை வளர்க்க நீங்கள் தயாரா?..




No comments: