Monday, December 7, 2009

நான் ரசித்த காதல் கவிதைகள் பாகம் 3


* இந்த மலையைக் குடைந்து ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா உன் கல்மனசுக்குள் நுழைவது எப்படி என்பது.

* உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறது உன்னை நேசிக்கிற என்னை மட்டும் சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.

* நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறது. சூரியனோ உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில் எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

* துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு

* சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறது என்றாலும் நீ வரும்போதுதான் விழிக்கிறது இந்த வீதி.

தபுசங்கர்

2 comments:

கமலேஷ் said...

நல்ல பதிவு நண்பரே...

Keddavan said...

நன்றி கமலேஷ்