* நீ என்னைக் காதலிக்கிறாயா என்பது புரியாத அந்த ஆரம்ப நாட்களில் ... தெரியாத்தனமாக நீ அணிந்திருந்த உடையின் வண்ணத்தில் என் சட்டையின் வண்ணம் இருந்ததைக் கவனித்த என் அயோக்கிய நண்பன் ஒருவன் 'டேய் என்ன இரண்டு பேரும் ஒரே கலரில்...' கிண்டல் செய்துவிட அப்போதே அவனைத் திட்டினேன் ... அவ்வளவு மகிழ்ச்சியாய்த் திட்டமுடியுமா என்கிற ஆச்சரியத்துடன்.
அதன் பிறகு அந்தச் சட்டையைப் போடவே கூச்சமாய்ப் போய் பெட்டியில் ஒளித்து வைத்துவிட்டேன் ... என்று நான் இப்போது சொல்லிக்கொண்டிருக்கையில் நீ முகத்தை மூடிக்கொண்டாய். ஏன் என்று கேட்டதற்கு ' நானும் அப்படித்தான் ஒளித்து வைத்துக் கொண்டேன்' என்கிறாய்.
* கும்பலில் எல்லாம்
நீ போகாதே . . . யார் யாரோ மிதிக்கிறார்கள் உன் நிழலை.* தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது*புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன். உனது விழியின் ஈர்ப்பு விசையில் எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்.*தெய்வமே..
உன்னை என் இதயத்திலிருந்து வெளியேற்றிவிட்டு. ஒரு பெண்ணைக் குடிவைத்தற்க்காக கோபித்துக்கொண்டு என்னைக் கைவிட்டு விடதே!.. உன்னால் தூ ணிலோ துரும்பிலோ கூட வாசம் செய்யமுடியும். அவளால் முடியுமா? தபுசங்கர்
1 comment:
கும்பலில் எல்லாம்
நீ போகாதே . . . யார் யாரோ மிதிக்கிறார்கள் உன் நிழலை.
///
தபு சங்கர் தபுசங்கர்தான்
Post a Comment