Saturday, December 5, 2009

எப்படி வந்தது கற்பு?


‘கற்பு’ எனும் சொல்லின் வரலாற்றை ஆராய்ந்தால், அதிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் கற்பு என்ற வரையறைக்குள் ‘செக்ஸ்’ வரவில்லை. இப்போது இதைச் சொன்னால் ஆபாசமாகத் தெரியும். ஆனால், அதுதான் உண்மை.

திரேதாயுகத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஸ்வேதகேது என்ற முனிவர்தான் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கற்பு நெறிகளை வரையறுத்தவர் (நந்திதேவர் எழுதிய காம சாஸ்திரத்தை சுருக்கிய அதே ஸ்வேதகேதுதான்!).

ஸ்வேதகேதுவின் தந்தை உத்தாலகன், பலராலும் மதிக்கப்பட்ட பிரம்ம ஞானி. அவர் தன் மனைவி, மகனோடு வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு சம்பிரதாயம் இருந்தது. ஒருவரது வீட்டுக்கு ‘எப்போது வருவேன்’ என திதி, நேரம் சொல்லிவிட்டு உறவினர்கள் விருந்தினர்களாக வருவதுண்டு. இது தவிர முன்பின் அறிமுகமில் லாத நபர்கள் யாராவது திடீரென வந்தால், அவர்களை விருந்தினராக ஏற்கும் பழக்கம் அப்போது உண்டு. திதி, நேரம் சொல்லாமல் திடீரென வருவதால் இவர்களை ‘அதிதி’ என்பார்கள்.
தூரதேசப் பயணம் போகிறவர்கள், இரவில் பயணிக்க முடியாது. ஊர்களுக்கு நடுவே காடுகள் இருக்கும். வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும். இப்போது போல லாட்ஜ்கள், ஹோட்டல்கள் அந்தக் காலத் தில் இல்லை. வழியில் இருக்கும் எந்த வீட்டுக்குப் போனாலும் அவர்களை அதிதியாகக் கருதி வரவேற் பார்கள். அதிதிக்கு ஒரு கிரகஸ்தன் எப்படி விருந்து அளிப்பது என ஆசாரங்கள் உண்டு.

அவர் விரும்பிய உணவு வகைகளை சாப்பிடத் தர வேண்டும். அது மட்டுமில்லை... அந்த இரவை அங்கே கழிக்கும் அதிதி, கிரகஸ்தனின் மனைவி மீதோ, மகள் மீதோ ஆசைப்பட்டால், அவளையும் அவனுக்கு விருந்தாகத் தர வேண்டும். ஒரே நிபந்தனை... இதற்கு அந்தப் பெண் னு ம் சம்மதிக்க வேண்டும். ஆனால், இப்படி அதிதியோடு படுக்காவிட்டால், சம்பிரதாயத்தை எதிர்க்கிற மாதிரி ஆகிவிடும் என்பதால், வேண்டாவெறுப்பாகப் பெண்கள் சம்மதித்து விடுவார்கள்.

ஸ்வேதகேது ஒருநாள் எங்கோ வெளியில் போய் விட்டு வீடு திரும்பியபோது, தனது தாய் யாரோ ஒரு முன்பின் தெரியாத ஆளோடு படுக்கையில் இருப்பதைப் பார்த்து விட்டார். அப்பா உத்தாலகன் அமைதியாக வீட்டுக்கு வெளியே இருந்தார். இதைப் பார்த்து ஸ்வேதகேது, கோபத்தோடு அப்பாவிடம் சண்டை போட்டார்.

‘‘என்ன அசிங்கம் இது?’’ என அவர் கொதிக்க, ‘‘இதுதான் காலம்காலமாக இருக்கும் பழக்கம் மகனே!’’ என விளக்கமாக சொன்னார் அப்பா.

ஸ்வேதகேது சமாதானம் அடையவில்லை. ‘‘என்ன கொடூரமான ஆசாரம் இது! இப்படிப்பட்ட உறவின் மூலமாக ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு யார் அப்பா?’’
உத்தாலகன் சிரித்தார். ‘‘மகனே! நீகூட எனக்குப் பிறக்கவில்லை. என் சீடன் ஒருவன் உன் தாயுடன் கொண்ட உறவால் பிறந்தாய். ஆனால், நான் உன்னை மகனாக ஏற்று, ஒரு தந்தை மகனுக்கு செ ய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்கிறேனே’’ என அவர் சொல்ல, ஸ்வேதகேது நிலைகுலைந்து போனார்.

ஸ்வேதகேதுவும் பலரால் மதிக்கப்படும் நபர். அவர் உடனே முனிவர்கள் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி விவாதித்தார். இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றார். ஆனால், ‘‘சம்பிரதாயத் துக்கு எதிராக நீ கலகம் செய்கிறாய்.. பெண்கள் விரும்பித்தான் இதை செய் கிறார்கள்... அவர்களது சுதந்திரத்தில் நீ தலையிடுகிறாய்’’ என முனிவர்கள் அவரைக் கண்டித்தனர்.
இருந்தாலும் இரு தரப்புக்கும் பொதுவான ஒரு உடன்பாடு எட்டப்பட்டது.

‘அதிதிக்கு இப்படி கிரகஸ்தர் வீட்டுப் பெண்ணை விருந்தாகத் தரலாம். ஆனால், கரு உருவாகும் வாய்ப்புள்ள நாட்களில் இதைத் தவிர்த்து, அதிதியின் குழந்தை அங்கு உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்’ என முடிவானது.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்புநெறிகளை ஸ்வேதகேது புகுத்தினார். இன்னமும்கூட கிராமப்புறங்களில் வாளிச்சண்டை வரும்போது, ‘விருந்தாளிக்கு பொறந்தவனே...’ என திட்டுவது வழக்கம். இந்த வசவு அநேகமாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கும் போல!


உயிர் என்னும் நூலில் இருந்து எடுப்பட்டது..

8 comments:

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

அதிதிக்கே இந்த விருந்தானால், திதி தெரிவித்துவிட்டு வரும் விருந்தினருக்கு, விருந்து மிகப்பிரமாதமாக இருந்திருக்கும்!

Keddavan said...

//அதிதிக்கே இந்த விருந்தானால், திதி தெரிவித்துவிட்டு வரும் விருந்தினருக்கு, விருந்து மிகப்பிரமாதமாக இருந்திருக்கும்!//நல்ல காலம் கற்ப்பை கண்டுபிடிச்சு குடும்பங்களை காப்பாற்றிட்டாங்க..

Anonymous said...

மனிதர்கள் விலங்குகளைப் போலவே வாழத்துவங்கினர்.
போகப் போக சமூகத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்க இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற அணுகுமுறையும், திருமணம் வழக்கமும் வளர்ந்திருக்கலாம்.
இதில் நந்தி, வாச்தாயானர் முதலியவர்கள் காலம் தெரியவில்லை.
தவிரவும், தமிழ் நாட்டிலும் களவு நெறி என்றும், கற்பு நெறி என்றும் இருந்துள்ளன என அறிகிறோம். இதில் களவு நெறி கற்பு ஒழுக்கமே இல்லாமல் இருப்பது தான்

தனபால் said...

1 .நாகரீகம் தோன்றாத இனங்களில் மகன் தன் தாயிடமும்,சகோதரியிடமும்,தந்தை தன் மகளிடமும் உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாகரீகம் வளர வளர சிறிது சிறிதாக இப்போதுள்ள நிலைக்கு வந்துள்ளோம்.
2 .உலகில் முதல் முதலில் நாகரீகம் தோன்றியது நம் இந்திய கலாசாரத்தில் தான்.சுமேரிய,எகிப்திய,கிரேக்க நாகரீகங்கள் உருவாவதற்கு முன்பே தோன்றிய நாகரீகம் நம் இந்திய நாகரீகம்.
3.இந்தப் பதிவில் உள்ளது போல் இந்தியர்கள் இருந்திருக்கும் சமயத்தில் உலகின் மற்றப் பகுதியில் எண்.1 இல் குறிப்பிட்டபடிதான் இருந்திருப்பார்கள்.
4.அந்தகாலத்து இந்திய நாகரீகத்தை அந்த காலத்து மற்றப் பகுதிகளின் நாகரீகத்துடன் ஒப்பிட்டுவதே அறிவுடைய செயலாகும்.
உங்கள் பதிவு உங்கள் நாகரீகத்தைக் காட்டுகிறது.

Anonymous said...

virgin is important for girls n boys. my opinion is good idea to make dis story. he is a great man also he save the family n da girls life. i reallllllllllly thank ful him, but i miss niz person in dis world. also 2day world women, men girls n boys very very very proud of him. i realllly like dis story n knw dis information. wow look great.....

Keddavan said...

//மனிதர்கள் விலங்குகளைப் போலவே வாழத்துவங்கினர்.
போகப் போக சமூகத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்க்க இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற அணுகுமுறையும், திருமணம் வழக்கமும் வளர்ந்திருக்கலாம்// நன்றி அனானி..

Keddavan said...

//3.இந்தப் பதிவில் உள்ளது போல் இந்தியர்கள் இருந்திருக்கும் சமயத்தில் உலகின் மற்றப் பகுதியில் எண்.1 இல் குறிப்பிட்டபடிதான் இருந்திருப்பார்கள்//

நீங்கள் சொல்லுவது சரிதான வெள்ளைக்காரர்கள் உலோகத்தை கண்டுபிடிக்காத காலத்திலேயே நடராஜருடைய செப்புசிலைகளை செய்யத்தொடங்கி விட்டார்கள் இந்தியர்கள்..அவர்களினால் எம்மை விட முன்னேற முடிந்ததறக்கு ஓரே காரணம் நுற்றாண்டுக்கணக்காக எமது நாடுகளை கைப்பற்றி கொள்ளையடித்ததனால மட்டுமேயாகும்..

Keddavan said...

//virgin is important for girls n boys. my opinion is good idea to make dis story. he is a great man also he save the family n da girls life. i reallllllllllly thank ful him, but i miss niz person in dis world. also 2day world women, men girls n boys very very very proud of him. i realllly like dis story n knw dis information. wow look great.....//
ஹிஹி உங்கள் கருத்தை தெரிவித்தற்க்கு நன்றி அனானி..