இப்பொழுது புதிய வரவான இந்த சோசல்கேம்ஸ் (Social games) எனப்படும் விளையாட்டுக்கள் இளையர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகி உள்ளன..எங்கு பார்த்தாலும் இதனைப்பற்றிய கதைதான்..பல 3d Animation games இலவசமாக கிடைத்த போதும்..இந்த சிறிய பிளாஸ்கேம்ஸ்சிற்க்கு(Flash games) கிடைத்திருக்கும் வரவேற்ப்பு அளப்பரியது..இதற்க்கு முக்கிய காரணம் மற்ற விளையாட்டுக்களைப்போல நாங்கள் கணனியுடன் விளையாடாமல் இதில் எமது நண்பர்களுடன் போட்டி போட்டு விளையாடகூடியதாக இருப்பது தான்..
இன்று இந்தவரிசையில் பிரபலமாக இருக்கும் சில விளையாட்டுக்களைப்பற்றி
பார்ப்போம்..
இதில் Farm Games எனப்படும் விளையாட்டுக்கள் எமது நண்பர்களினால் அதிகம் விரும்பி விளையாடப்படுகின்றுது..இதில் என்ன விசேடம் என்றால் நீங்கள் ஒரு பயிரை நட்டுவிட்டால் அது வளர 1 நாள் அல்லது 2 வரை நேரம் எடுத்துக்கொள்ளும்..பசலை போடுவதன் விரைவாகவளர்க்க முடியும்..அத்துடன் நண்பர்களின் தோட்டத்திற்க்கு சென்று அவர்களுக்கு களைபிடுங்கி உதவவும் முடியும் அல்லது நன்றாக வளர்ந்த பயிரை திருடிசெல்லவும் முடியும்..இறுதியில் பயிரை அறுவடை செய்து சந்தையில் விற்று அதன்ழூலம் வரும் பணத்தின் ழூலம் காணி வீடு பசலைகள் எல்லாம் வாங்கி முன்னேற வேண்டும்..பல நண்பர்களை பேஸ்புக்கின் அரட்டையின் ழூலம் மச்சான் என்னடா செய்திட்டிருக்க?..என்று கேட்கும் போது விவசாயம் பண்ணீட்டு இருக்கண்டா என்று பதில் சொன்னர்கள்..நானும் ழுதல்ல புரியாமா முளிச்சிட்டு இருந்தன்..பின்பு தான் இதுதான் விடயம் என்று அறிந்து கொண்டேன்..நீங்க தயாரா விவசாயம் செய்து பார்க்க?...
4 comments:
நன்றாக வளர்ந்த பயிரை திருடிசெல்லவும் முடியும endru sonnirgala eppadi thiruda mudiyum nanbara
Burn buddy என்ற விளையாட்டே திருடுவதற்க்கு புகழ்பெற்றது..நீங்கள் நண்பர்களின் தோட்டங்களை பார்வையிடும் போது அவர்களது தோட்ட்தில் வளர்ந்திருக்கு களையகற்ற முடியும்.பூச்சிநாசினி அடிக்கமுடியும்..அதேபோல் நன்குவழர்ந்தநிலையில் இருக்கும் பயிரை நண்பர் அறுவடைசெய்ய முன்பு நீங்கள் கருப்பு கையுறையை வைத்து திருடவும் முடியும்..உங்களுக்கு பிடிக்காதவர் தோட்டத்திற்க்கு களையையும் பூச்சியையும் போட்டு வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்..உங்கள் தோட்டத்தில் மற்றவர்கள் களவெடுக்காமல் இருக்கவேண்டுமாயின் நாய்வளர்க்க வேண்டும்..விளையாடிப்பார்த்திட்டு சொல்லுங்கள்..
நண்பரே நானும் இந்த விளையாட்டினை முயற்சி செய்து பார்த்தேன் ... ஆனால் எப்படி விளையாடுவது என்று புரியவில்லை. இது பற்றிய விளக்கம் எளிய தமிழில் எங்கு கிடைக்கும்?
//நண்பரே நானும் இந்த விளையாட்டினை முயற்சி செய்து பார்த்தேன் ... ஆனால் எப்படி விளையாடுவது என்று புரியவில்லை. இது பற்றிய விளக்கம் எளிய தமிழில் எங்கு கிடைக்கும்?//
இது மிக இலகுவான விளையாட்டு..தமிழில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை...வேண்டுமானால் நான் இதனை விளக்கி ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்..
Post a Comment